இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



12
உயிரின் தோற்றம்

கண்டுபிடிப்பதில் இயற்கை விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அதாவது உயிர்கள் எவ்விதம் தோன்றின என்ற கேள்விக்கு விடை காண முனைந்தனர். “டூரிங்குக்கு மறுப்பு” “இயற்கையின் இயங்கியல்' என்ற இரு நூல்களில் பிரடரிக் ஏங்கெல்ஸ், அவர் காலத்திலுள்ள இயற்கை விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலமாகக் கிடைத்த அறிவைப் பொதுமைப்படுத்தி விஞ்ஞான ரீதியில் 'உயிரின் தோற்றம் பற்றி ஒரு விளக்கம் தந்தார். மேலும் அப்பிரச்சினை குறித்து ஆராயும் முறைகளையும் வரையறுத்தார். அவர் காட்டிய பாதையில் ஆராய்ச்சிகள் நடத்தி சோவியத் உயிர்நூலார் வெற்றிபெற்றுள்ளனர். இயற்கை நிலைமைகளோடு எவ்விதத் தொடர்பும் இன்றி தானாகவே உயிர் தோன்ற முடியும் என்ற விஞ்ஞானத்திற்குப் புறம்பான கருத்தை அவர் நிராகரித்தார். உயிருள்ளனவற்றிற்கும், இல்லாதவற்றிற்கும் தொடர்பு உண்டு என்று அவர் நிரூபித்தார். உயிர் தோன்றும் முன்னால் இயற்கையில் , பொருள்கள் பல சிறு சிறு மாறுதல்கள் அடைந்து, ஒரு குறிப்பிட்ட சரித்திர நிலைமையில் உயிர் என்னும் புதிய பண்புடைய பொருள்களாக வளர்ச்சியுற்றன என்று விஞ்ஞானச் சான்றுகளின்துணைகொண்டு விளக்கினார்.

டார்வினது போதனையின் முக்கியச் சிறப்பு என்ன? உயிருள்ளவை இடையறாது வளர்ச்சியுறுகின்றன; அதன்


  • (Darwinism) டார்வின் தத்துவம்: சார்லஸ் டார்வின் என்ற விஞ்ஞானி 1802-இல் பிறந்தார். "இயற்கையின் தேர்வு” என்ற நியதிப்படி முந்திய இனங்களிலிருந்து படிப்படியான மாறுதல், அதாவது பரிணாம வளர்ச்சியால் ஜீவராசிகள் தோன்றின என்று அவர் வலியுறுத்தினார் வாழ்வுப் போராட்டத்தில், தகுந்தவை தங்கி நின்றன, தகுதியற்றவை மறைந்தன என்பது அவரது சித்தாந்தம், ஜீவராசிகளின் மூலம், அல்லது 'இனங்களின் மூலம் என்ற சரித்திரப் பிரசித்திபெற்ற நூலை 1859-இல் வெளியிட்டார். நீர்ப்பாசியிலிருந்து, புழு பூச்சி முதலிய ஜீவ ராசிகள் அனைத்தும் பரிணாம நியதிப்படி தோன்றி இறுதியில் குரங்கு இனம் தோன்றியது. அந்தக் குரங்கின் மூதாதையான ஒரு பிரிவின் காலக்கிரம வளர்ச்சிதான் மனிதன், என்பது அவர் தத்துவம்.