இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



30
உயிரின் தோற்றம்

மானதா? தூசியும் வாயுவும் கொண்ட மேகங்களிலிருந்து நட்சத்திரங்கள் தோன்றியது போல பூமியும் தோன்றியிருக்க முடியாதா? சூரியனைப் போலவே, பூமியும் உண்டாகியிருக்க முடியாதா? சூரியன் தோன்றும்போது, நட்சத்திரங்களைச் சுற்றியிருக்கும், வாயு, தூசியைப் போல் அதைச்சுற்றியிருந்த பொருள்களிலிருந்து உலகமும் வேறு கிரகங்களும் தோன்றியிருக்க முடியாதா? தமது உலகம் தோன்றும்போது சேதனப் பொருள்கள் எந்நிலையிலிருந்தன என்ற கேள்விக்கு விடை காண மேற்குறித்த ஐயங்கள் வழிகாட்டுகின்றன. அவை யாவும் சேதனங்களின் விளைவாக எழுந்தவை.

நட்சத்திர மண்டலத்தின் இடைவெளியிலுள்ள வாயுக்களும் தூசியும், எப்பொருள்களால் ஆக்கப்பட்டிருக்கின்றன என்பதை நவீன ஆராய்ச்சி தெளிவாக்குகிறது. இடைவெளியிலுள்ள மேகங்களில் நீரகம், மீதேன் (என்ற கரியும் நீரகமும் சேர்ந்த கூட்டுப் பொருள்) மேலும் சிக்கலான அமைப்புடைய கரி நீரகங்கள், அம்மோனியா, பனிக்கட்டி வடிவில் நீர் ஆகியவை உள்ளன. இவைதான் ஆரம்ப சேதனப் பொருள்கள் தோன்றத் தேவையானவை. எப்படி உலகம் தோன்றியிருப்பினும், இப்பொருள்கள் ஆரம்பத்தில் இடைவெளியில் இருந்த காரணத்தால் சேதனப் பொருள்கள் உலகத்தின் வளர்ச்சிப் போக்கில் தோன்றும் என்ற நிச்சயம் உண்டு. கரிநீரகங்கள் தண்ணீரோடு கூட்டுப் பொருளாக முடியுமென்ற ஒ. இ. பாவ்ராஸ்கி என்ற ரசாயனியும், வேறு ரசாயனிகளும் நிரூபித்துள்ளார்கள். ஒரு கரிநீரகக் கூட்டணுவும், ஒரு நீர்க்கூட்டணுவும் சேருவதை அவர்கள் கண்டிக் கிறார்கள். முதன் முதலில் உலகில் தோன்றிய கரிநீரகப் பொருள்கள், நீரோடு சேர்ந்த கூட்டுப்பொருள்களாக இருந்தன என்பதில் ஐயமில்லை. இதனால் அக்காலத்தில் பூமியின் மேலுள்ள வெளியில், நீரிலுள்ள ஆக்ஸிஜனோடு, கரிநீரகப்பொருள்கள் சேர்ந்து வினையாற்றுவதால் கிடைக்கும் பொருள்களும் இருந்தன. பல மதுசாரங்கள் (Alcohols)