இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

உயிரின்தோற்றம்


பினால் ஆனவை. ஆனால் இணைப்பு முறைகள் வித்தியாசமானவை.

தற்போதைய புரதங்களின் அணுக்கூட்டுகள் சாதாரணப் பொருள்களின் அணுக்கூட்டுகளை விடப்பெரியவை. ஏனெனில் ஆயிரக்கணக்கான அணுக்கள் அவை ஒவ்வொன்றிலும் உண்டு. அவைபோலவே புரதங்களின் அணுக்கூட்டுகளுக்கு பல தொடர்களோடு இணைந்துகொள்ளும் திறனும் உண்டு. இத்திறனே அவைமேலும் பரிணாம வழியில் பல சேதனப் பொருள்கள் உண்டாவதற்கு வழி செய்கிறது.

நட்சத்திரத்திலுள்ள ஆவிகளில் கரியும் ஒன்று. அது சேதனப் பொருளல்ல. ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன், இவற்றோடு சேரும் திறன் அதற்கு உண்டு. சரியான நிலைமைகளில் இம்மூன்றின் கூட்டுறவால் சேதனப் பொருள்கள் தோன்றின. அதுபோலவே புரதப்பொருள்களுக்குள் தங்களுக்குள்ளே இணைந்து மாறும் திறன் இருந்தது. அதனால்தான் சரியான நிலைமைகளில் உயிருள்ளனவாக உருவெடுத்தன. இதுவே உயிருள்ளன தோன்றிய விதம்.

நமது பூமியின் வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் நைட்ரஜன் ஒரு மூலப் பொருளாகக் கொண்ட புரதப் பொருள்களென்னும் சிக்கலான அமைப்புடைய சேதனப் பொருள்கள் புராதன சமுத்திரங்களில் உண்டாவது தவிர்க்க முடியாததாயிற்று. அவைதான் உயிரினங்கள் என்னும் வீடுகளை கட்டத் தேவையான செங்கல்லும், சுண்ணாம்பும். ஆனால் அக்காலத்தில் வீடு கட்டப்பட்டுவிடவில்லை. சேதனப் பொருள்கள் கடல்களில் கரைந்திருந்தன. அவற்றின் அணுக்கூட்டுகள் கடல் முழுதும் சிதறிக் கிடந்தன. ஒவ்வொரு உயிருள்ளவைக்கும் இருக்கும் இணைப்பும், அமைப்பும் இவ்வணுக்களிடையே அக்காலத்தில் இல்லை.