இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

உயிரின்தோற்றம்


ஆராய்கிறார்கள். பங்கன்பர்க் யாங், குருயூட், மாஸ்கோ சர்வகலாசாலை, ஆகிய ஸ்தாபனங்களிலுள்ள ஆய்வுக்கூடங்களில் இச்சோதனைகள் நடைபெறுகின்றன. இச்சோதனை களால் நாம் தெரிந்துகொள்பவை எவை? கோயகர்வேட் துளிகள் புரத முழுவதையும் வெளிக்கொணர்ந்து விடுகின்றன. தெளிவான கரைசலில் தண்ணீர் மட்டுமே மிஞ்சுகிறது. கோயசர்வேட்துளிகளில் புரதத்தோடு சிறிதளவு நீரும் உண்டு. இவை தண்ணீரோடு இரண்டறக் கலவாமல் தனித்து நிலவும் தன்மையுடையவை. இதே பண்பு உயிருள்ளவற்றிலுள்ள புரோடோபிளாஸ்ம்' என்ற உயிர்ச்சத்துக்கும் உண்டு. ஒரு தாவரத்தின் ஜீவ அணுவை நசுக்கி அதனுள்ளிருக்கும் புரோடோபிளாசத்தை தண்ணீரினுள் ஊற்றினால் அது நீரில் கரையாது. சிறுசிறு பந்துக்களைப்போல அவை நீரின்மீது மிதக்கும். செயற்கையில் செய்யப்பட்ட கோயசர்வேட்டுக்கும், இயற்கையில் உண்டான புரோடோ பிளாசத்திற்கும் உள்ள இந்த ஒற்றுமை மிக முக்கியமானது. புரோடோபிளாசம் கோயசர்வேட் தன்மையோடுதானிருக்கிறது என்பதை சமீபகால ஆராய்ச்சி உறுதிப்படுத்துகிறது. செயற்கை கோயசர்வேட்டைவிட அதன் அமைப்பு சிக்கலானது. புரோடோ பிளாசத்தில் பல குழம்பு போன்ற பொருள்கள் உள்ளன. கோயசர்வேட்டில் இரண்டே இரண்டு பொருள்கள்தானிருக்கும். ஆனால் கோயசர்வேட்டைப் பற்றிய ஆராய்ச்சிகளின் மூலமாகத்தான் புரோடோபிளாசத்தின் தன்மைகளை அறிந்துகொள்ளமுடிகிறது. கோயசர்வேட்டுகள் திரவ நிலையிலிருப்பினும், அவற்றிற்குக் குறிப்பிட்ட வடிவம் இருக்கிறது. அவற்றின் கூட்டணுக்களும் குழம்பு போன்ற பொருள்களும் ஒழுங்கற்ற முறையில் அல்லாமல், குறிப்பிட்ட தூர இடை வெளியில் ஒழுங்கான முறையில் இணைக்கப்பட்டுள்ளன. சில கோயசர்வேட் துளிகளில், கூட்டணு இணைப்பு முறையை மைக்ராஸ்கோப்பின் மூலம் பார்த்து அறிந்து கொள்ளலாம். ஆனால் அவ்விணைப்பு நிலையானதல்ல. இவ்விணைப்பைச் சாத்தியமாக்குகிற சக்திகள் இருக்கும் வரைதான் அவ்விணைப்புகள் நிலைக்கும். அப்புறம் குலைந்து