இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

உயிரின் தோற்றம்


பொருள்களைக் கொண்ட கோயசர்வேட் துளிகள் அதனுள் உள்ளன. நார் போன்ற துணுக்குகளும், புரத அணுக்கூட்டுகளும், கோயசர்வேட் பொருளில் மிதக்கின்றன. இத்துணுக்குகள் அளவில் சிறியன. மைக்ராஸ்கோப் வழியாகப்பார்த்தாலும் தெரியாது. அதன் வழியாகப் பார்த்தால் தெரியக்கூடிய சில பொருள்களும் உண்டு. நியூக்ளியம், பிளாஸ்டிட் என்ற வகையான குறிப்பிட்ட அமைப்பும், புரதம் முதலிய கூட்டணுக்களால் ஆகியதுமான பொருள்களை புரோட்டோபிளாசத்திலிருந்து பிரித்தெடுக்கலாம்.

எத்தனையோசிக்கலான உள்ளுறவுகளின் வெளி உருவமே புரோட்டோபிளாசம். அது மாறும் அமைப்புடையது. உயிர் நிகழ்ச்சிகளின் இத்தன்மை மிகமுக்கியமானது. இயந்திரத்தின் அமைப்பிலுள்ள திட்டத்தோடு இதன் அமைப்பை ஒப்பிட முடியாது. அவ்விரண்டும் ஒவ்வொரு அம்சத்திலும் வேறுபடுகின்றன.

இயந்திரத்தின் தனிப் பகுதிகள் இடைவெளியில் எவ்வாறு அசைகின்றன என்பதைப் பொறுத்து இயந்திரத்தின் முழு வேலையும் நிர்ணயிக்கிறது. பகுதிகளின் இணைப்புதான் இயந்திரத்தின் சிறப்பான அம்சம். உயிர் நிகழ்ச்சிகள் இயந்திர அசைவுகளினின்றும் முற்றிலும் வேறுபடுபவை. முதன்முதலில் புரோட்டோபிளாசத்தினுள் அதன் பல பகுதிகளிடையே ரசாயனமாறுதல்கள் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. பகுதிகளுக்கிடையே இடைவெளியில் உள்ள இணைப்பு இயந்திரங்களில் முக்கியமாயிருப்பதுபோல புரோட்டோபிளா சத்தில் முக்கியமானதல்ல. அதனுள் நடக்கும் ரசாயன மறுதல்களில் முதலில் நடப்பது எது, அடுத்து நடப்பது எது என்ற கால இடைவெளி வரிசையே சிறப்பான அம்சமாகும். அம்மாறுதல்கள் அனைத்தின் முழுமையே, உயிருள்ளனவற்றை நிலைத்திருக்கச் செய்கிறது.

யாந்திரீக வாதிகளின் கருத்திலிலுள்ள தவறு என்ன? (உடலினுள் காணப்படும் நிகழ்ச்சிகளை இயந்திரத்தின் பகுதிகளுக்கு முழுதும் ஒப்பிடுபவர்கள்) யாந்திரிக வாதிகள்,