இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

உயிரின் தோற்றம்


சரியல்லவென்று ஆராய்ச்சிகள் முடிவு கூறுகின்றன. உயிருள்ள புரோட்டோபிளாசத்தில் நடக்கும் ரசாயன நிகழ்ச்சிகளின் வேகம், திசை, பரஸ்பரத் தொடர்பு ஆகிய யாவும் இவைதான் நிகழ்ச்சிகளின் ஒழுங்கை நிர்ணயிக்கின்றன.) அதனுள் நிலவும் ரசாயன பெளதீக உறவுகளைப் பொறுத்திருக்கிறது என்பது ஐயத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

புரோட்டோபிளாசத்தை உண்டாக்கும் ரசாயனப் பொருள்களின் ரசாயனத்தினால்தான் இத் தன்மைகள் அதற்கு ஏற்படுகின்றன. அப்பொருள்கள் எவை, அவற்றின் தன்மைகள் யாவை, என்பதை முன் அத்தியாயங்களில் விவரித்தோம். இப்பொருள்களின் ரசாயனத்திறன் அபாரமானது. அவை பல வேறுபட்ட நிகழ்ச்சிகளை உண்டாக்க முடியும். ஆனால் அப்பொருள்கள் மிகக் குறைந்த வேகத்தில்தான் வினை நிகழ்த்துகின்றன. சில வேளைகளில் வினை முற்றுப்பெற மாதங்கள், அல்லது வருடங்களாகலாம். எனவேதான். இவ்வினைகளைத் துரிதப்படுத்த ரசாயனிகள், அமிலங்கள் காரங்கள் போன்ற பொருள்களை உபயோகிக்கின்றனர்.

இவ்வாறு ரசாயன வினைகளைத் துரிதமாக நடத்த உதவுகின்ற பொருள்களுக்கு “வினைஊக்கிகள்” (catalysts) என்று பெயர் நிகழ்ச்சிகளை ஊக்குவிக்க அவை அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. வினை செய்யும் பொருள்களோடு, மிகச் சிறிய அளவில் வினைஊக்கியைச் சேர்த்தால் அது வியக்கத்தக்க அளவில் வினையைத்துரிதப்படுத்துகிறது. வினைஊக்கி, வினை நிகழ்ச்சியின்போது அழிந்துபோவதில்லை; இறுதியில் முன்பிருந்தபடி, அதே அளவில் மிஞ்சுகிறது, மிகுந்த அளவு பொருள்களை ரசாயன மாற்றமடையச் செய்ய, மிகக்குறைந்த அளவு வினைஊக்கிகள் போதும் இம்முறையை ரசாயன மாற்றங்களில் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். உலோகங்கள், உலோக ஆக்சைடுகள், உப்புகள், இன்னும் பல சேதன, அசேதனக் கூட்டுப்பொருள்கள் எல்லாம் வினை ஊக்கிகளாகப் பயன்படுகின்றன.