இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. வானமாமலை

61


தாவரங்களிலும், பிராணிகளின் உறுப்புகளிலும் ரசாயன வினைகள் மிகவும் வேகமாக நடைபெறுகின்றன. அவ்வாறு வேகமாக நடைபெறாவிட்டால் உயிர்ப்பிராணிகள் வேகமாக அபிவிருத்தியடைவது சாத்தியமாயிராது. புரோட்டோபிளாசத்தினுள் வேகமாக மாறுதல்கள் நடைபெறுவதற்குக் காரணம், உயிருள்ளவைகள் உற்பத்தி செய்கிற வினை ஊக்கிகள் அதனுள்ளிருப்பதுதான். அவற்றிற்கு ‘என்ஸைம்கள்’ என்று பெயர்.

நீண்ட நாட்களுக்கு முன்பே என்ஸைம்கள் கண்டுபிடிக் கப்பட்டன. விஞ்ஞானிகளின் கவனத்தை அவை நெடுநாளாகவே கவர்ந்துள்ளன. உயிருள்ள புரோட்டோபிளாசத்திலிருந்து அவற்றை நீர் கரைசலாகவோ, கரையக்கூடிய பொடியாகவோ பெறலாமென்று விஞ்ஞானிகளுக்குத் தெரியும். ஸ்படிகரூபத்தில் அவற்றைத் தயாரித்து, அவற்றின் ரசாயனப் பண்புகளையும் ரசாயனிகள் அறிந்துள்ளார்கள். எல்லா என்ஸைம்களும், சுத்தமான புரதங்களாகவோ, அல்லது வேறு பொருள்களோடு கூடிய புரதங்களாகவோ காணப்படுகின்றன. அவை செயலாற்றும் தன்மையில் அசேதன வினை ஊக்கிகளை ஒத்திருக்கின்றன. வினைத்திறன் வலிமையில் மட்டும் என்ஸைம்கள் அவற்றினின்றும் வேறுபடுகின்றன. ஒரு குறிப்பிட்ட வினையை ஊக்குவிக்கும் அசேதன வினை ஊக்கிகளிடையே லட்சம் அல்லது கோடி மடங்கு அவை வேகமுள்ளவையாக இருக்கின்றன. இவ்வகையில் அவை அதிசயமான பொருள்கள். சேதனப் பொருள்களிடையே நிகழும் ரசாயன வினைகளை ஊக்குவிக்க ‘என்ஸைம்கள்’ என்ற புரதங்கள் மிகவும் சக்தி வாய்ந்த உபயோககரமான பொருள்கள்.

புரதங்களின் வினை ஊக்கும் இயல்பு மிகவும் திட்டவட்டமானது. (ஒவ்வொரு என்ஸைமும் குறிப்பிட்ட ஒரு வினையை மட்டும் ஊக்குவிக்கும்) சீரான வினைகள் நிகழும்போது சேதனப் பொருள்கள் என்ஸைமிலுள்ள புரதத்தோடு சேர்ந்து முதன்முதலில் ஒரு கூட்டுப் பொருளாகின்றன. அக்கூட்டுப்-


* இவை எச்சில், ஜீரண நீர் இவற்றுள் உள்ளன. குறிப்பிட்ட பொருள் மற்றொரு பொருளாக மாற உதவுகின்றன.