இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

உயிரின்தோற்றம்


குறைதல், ஆக்ஸிஜன் அதிகமாகும் தன்மை, உப்பு சேர்தல், கரைசலின் அழுத்தம், ஒவ்வொரு என்ஸைமின் வினைஊக்கித் திறனால் நிகழும் மாறுதலின் வேகம், ஆகிய அம்சங்கள் மாறுதல்களின் பரஸ்பரத் தொடர்பை, நேர இடைவெளியில் மாற்றக்கூடும். உயிருக்கும், சூழலுக்கும் உள்ள ஒற்றுமையின் முன்னறிவிப்புப் போல இவ்வினைகள் காணப்படுகின்றன. இவ்வொற்றுமையைப் பற்றி ஐ.வி. மிசரின் நூல்களிலிருந்து விரிவாக அறிந்துகொள்ளலாம். இன்று வாழும் உயிர்களின் ஜீவ அணுக்களில் நிகழும் மாறுபாடுகள் தூர இடைவெளியில் எவ்வாறு பொருள்கள் பொருத்தப்பட்டுள்ளன என்பதைப் பொறுத்தது. குவிந்துகூடும் புரதங்கள் கரைந்திருக்கும் நீரிலிருந்து வெளிவந்து தாமே விரைவாக இயங்கும் (புரோட்டோபிளாசத்தின் அமைப்புடைய) துளிகளாக மாற முடியும். இத்துளிகளின் மேற்பரப்பில் பல என்ஸைம்கள் கூடுகின்றன.

சோவியத் விஞ்ஞானக் கழகத்தில் நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சிகள், புரோட்டோபிளாசத்தைப் போன்ற பொருள்களோடு என்ஸைம்கள் எவ்வளவு அதிகமாக இணைந்திருக்கிறதோ, அதைப் பொறுத்தே வினைஊக்கி ரசாயன வினைகளின் வேகமும், திசையும் இருக்கும் என்று காட்டுகிறது. சீரான நிகழ்ச்சிகளுக்கும், சூழலுக்கும் உள்ள உறவின் வலிமையை இவை காட்டுகின்றன. குறிப்பிட்ட ஒரு தூண்டுதல், தனித்தனி என்ஸைமின் வேலையில் தலையிடாதிருந்தபோதிலும் சிதைவு, கூட்டு ஆகிய இரு வகை மாற்றங்களின் சமநிலையைக் கலைத்து புரதங்களின் இணைப்பு வன்மையை மாற்றிவிடுகின்றன. இவ்வம்சங்களின் மாறுதலால் எளிதில் மாறுபாடடையக் கூடியவை புரதங்களின் இணைப்பு வன்மை.

இனி இவ்வத்தியாயத்தில் கண்டவற்றைச் சுருக்கிக் கூறுவோம். புரோட்டோபிளாசத்திற்குச் சிறப்பான உள்ள அமைப்பு, உயிருள்ள பொருள்களை ஆக்கும் பொருள்களின் ரசாயனப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய பல்வேறு வகையான பொருள்களிருப்பதாலும்,