இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

உயிரின்தோற்றம்


வெளியாகும் துளிகள் ஒவ்வொன்றும் அமைப்பிலும் உள்ள அமைப்பிலும் சற்று வேறுபடுகின்றன. ஒவ்வொரு கோயசர் வேட்துளியின் தனிப்பட்ட அமைப்பும், பண்புகளும், அதனுள் நிகழும் மாறுதல்களுக்கு அடிப்படையாயின. (ஒவ்வொரு துளியில் நடைபெறும் மாறுதல் அதன் பண்பைப் பொறுத்து வேறுபட்டது) சில குறிப்பிட்ட நிலைமைகள், கோயசர்வேட் துளியினுள் நிகழும் மாறுதல்களையும், மாறுதல் முறைகளையும் நிர்ணயித்தன. (அந்நிலைமைகளாவன : ஒரு குறிப்பிட்ட பொருள் துளியில் இருப்பது அல்லது இல்லாதது; இரும்பு, செம்பு, கால்சியம் போன்ற உலோகங்களின் உப்புகள், கோயசர்வேட் துளியில் புரதங்களின் அடர்த்தி; கடைசியாக மிகவும் நிலையற்ற தன்மையுடையதாயினும் ஒரு குறிப்பிட்ட உள்ளமைப்பு உடையதாக அத்துளி இருப்பது ஆகிய நிலைமைகள்.) இவ்வாறு கோயசர்வேட் துளியின் தனி அமைப்பு, அதன் உள்ளமைப்பு ஆகியவற்றிற்கும், சூழலிலுள்ள நிலைமை அதனுள் நிகழும் மாறுதல்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொடர்பு ஏற்பட்டது. வெவ்வேறு துளிகளில் வெவ்வேறு மாறுதல்கள் நிகழ்ந்தன.

ஏறக்குறைய பல்வேறு வகையில் கோயசர்வேட்டில் நிகழ்ந்த மாறுதல்கள் அதன் வருங்காலத்தை நிர்ணயித்தன. அவற்றுள் சில பயனுள்ளவையாகவிருந்து துளிகளை நிலையுள்ளதாகவும் நீண்டநாள் நிலைத்திருப்பதாகவும் செய்தன. மற்றும் சில அழிவுப்போக்கில் மாறுதல்களை உண்டாக்கித் துளிகளை அழித்துவிட்டன.

தனி அமைப்புகள் இவ்வாறு தோன்றியது புதிய நியதிகளையும், ஒழுங்குகளையும் உண்டாக்கியது. இவை சேதனைப் பொருள் இரண்டறக் கலந்திருக்கும் கரைசலைப் பொறுத்தவை. “பயனுள்ளது”, “அழிவுள்ளது” என்ற சொற்கள் பெருளற்றனவாகத் தோன்றலாம். ஆனால் கரைசலிலிருந்து பிரிந்து வந்த துளிகளின் விஷயத்தில் இச்சொற்கள் பொருள் உள்ளனவையே. பயனுள்ள அல்லது அழிவுதரும் மாறுதல்களைப் பொறுத்து துளிகளின் வருங்காலம் இருக்கும்.