இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

உயிரின்தோற்றம்



கோயசர்வேட் துளிகள் நீண்டகாலம் நீடித்து நிலையாக விருக்கும் தன்மை உடையன. இயங்கு சமநிலை அவற்றிற்கு உண்டு. சிதைவு மாறுதலைவிட வேகமாக கூட்டு மாறுதல்கள் அவற்றுள் நிகழ்கின்றன. இதற்கு எதிரிடையாக சில துளிகளில், குறிப்பிட்ட சூழ்நிலைமையில் சிதைவு மாறுதல்கள் வேகமாக நிகழ்ந்தால், அவற்றின் விளைவாக துளிகள் மறைந்துவிடும். அல்லது அவை தோன்ற முடியாத நிலைமையும் ஏற்படலாம். அத்துளிகளின் வாழ்க்கைச் சரித்திரம் திடீரென்று முடிவுற்றன. பொருள்களின் பரிணாம வளர்ச்சியில் இத் துளிகளுக்கு இடமில்லை. வளர்ச்சியுற்ற துளிகளே மேலும் இயங்கு சமநிலையில் நிலைத்து பரிணாம வளர்ச்சியில் இடம்பெற்றன. அந்நிலைக்கு முரண்பட்ட துளிகள் புதிய அமைப்புத் தோன்ற வழியின்றி அழிந்தன. சூழ்நிலைக்குப் பொருத்தமில்லாத அமைப்புடைய துளிகள் சிதைந்தொழிந்தன. அவை வேறு சேதனப் பொருள்களாகி கரைசலோடு இரண்டறக் கலந்து விட்டன. அப்பொருள்களை சூழ்நிலைக்குப் பொருத்தமான துளிகள் உணவாகக் கொண்டன.

கூட்டு மாறுதல் முனைப்பாக நிகழ்ந்த துளிகள் (சிதைவு மாறுதலைவிட வேகமாக கூட்டு மாறுதல் நிகழ்தல்) நிலைத்தது மட்டுமில்லாமல் எடையிலும் பரிணாமத்திலும் பெரிதாயின. இவ்வாறாக, குறிப்பிட்ட சூழ்நிலைமைக்குப் பொருத்தமான அமைப்புடையதுளிகள் உருவத்தில் பெரிதாயின. சில யாந்திரிக இயக்கங்களின் காரணமாக இவை பகுதிகளாகப் பிரிதலும் கூடும். அவ்வாறு பிரிந்த ‘சிசு’க்களும்கூடத் தாயின் தன்மைகளைப் பெற்றிருந்தன. (அவற்றின் ரசாயன அமைப்பும், கூட்டணு இணைப்பும் முதல் துளியையே ஒத்திருந்தன.) பிரிந்தது முதல் ஒவ்வொரு துளிக்கும் தனிவாழ்க்கைப் பாதை வகுக்கப்பட்டுவிட்டது. ஒவ்வொரு துளியிலும் விசேஷ மாறுதல்கள் உண்டாயின. அம் மாறுதல்களின் தன்மையைப் பொறுத்து அவை நிலைக்கவோ, மறையவோ கூடும். சூழ்நிலை காரணமாக உள்ளமைப்பில் இயங்கு சமநிலை வாய்ந்த ஒவ்வொரு துளிக்கும் மேற்கூறிய விதி பொருந்தும். அத்தகைய துளிகளே நீண்ட நாட்கள் நிலைத்திருந்து புதிய துளிகளைத்