இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

உயிரின் தோற்றம்


அத்தியாயத்தில் பார்த்தோம். என்ஸைம்களின் சக்தியும், அவை குறிப்பிட்ட திசையில் மாறுதல் நிகழ உதவுவதும் அவற்றிலுள்ள வெவ்வேறு புரதங்களின் அமைப்பைப் பொறுத்தது என்பது சமீபத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மை. இவற்றில் வினைஊக்கிப் பொருள்களும், அவற்றின்திறனை மிகுதிப்படுத்தும் புரதங்களும் உள்ளன. உதாரணமாக ‘காடலேஸ்’ என்ற பெயருடைய என்ஸைமின் தன்மையைக் கவனிக்கலாம். அது ஹைட்ரஜன் பெர் ஆக்ஸைடு என்ற திரவம், நீராகவும், ஆக்ஸிஜனாகவும் ஆகும் ரசாயன மாற்றத்தை ஊக்குவிக்கிறது. இதே மாறுதலை இரும்பும் ஊக்குவிக்கும். ஆனால் இரும்பைவிடக் காடலேஸ் சக்திவாய்ந்த வினைஊக்கி, ஆனால் இரும்பை, பிரோல் என்னும் சேதனப் பொருள்களோடு கூடச்செய்து அக்கூட்டுப் பொருளை வினைஊக்கியாகப் பயன்படுத்தினால் முன்பைவிட 1000 மடங்கு வேகத்தில் மாறுதல் நடைபெறும் ‘காடலேஸ்’ என்ற என்ஸைம்கூட, இரும்பும், பிரோலும் கொண்ட இயற்கைப் பொருளே. ஆனால் அதைப் பயன்படுத்தினால் முன்பைவிடக் கோடி மடங்கு வேகத்தில் நிகழ்ச்சி நடைபெறு கிறது. காடலேஸில் ஒரு குறிப்பிட்ட புரதம் இருப்பதே இதற்குக் காரணம். காடலேஸிலுள்ள ஒரு மில்லிகிராம் எடையுள்ள இரும்பு இது குன்றின்மணி எடையில் பத்தில் ஒரு பங்குகூட இராது) பத்துடன் எடையுள்ள சாதாரண இரும்புக்கு (வினை ஊக்கித் திறனுக்குச்) சமம். மனிதன், செயற்கை முறைகளில் இன்னும் இயற்கையின் வினை ஆற்றலை மிஞ்சவில்லை.

என்ஸைம்களின் இவ்வசதியான சக்திக்கு அவற்றிலுள்ள புரதங்களின் அமைப்பும், இயக்கமுள்ள அணுக்கூட்டுகளின் தொகுப்புகளுமே காரணம். என்ஸைம்களின் பகுதிகளைத் தனித் தனியாக உபயோகப்படுத்தினால் அவை சக்திவாய்ந்தவையாகக் காணப்படவில்லை. அப்பகுதிகள் குறிப்பிட்ட வகையில் இணைக்கப்பட்டிருப்பதால்தான் இத்தகைய சக்தியை என்ஸைம்கள் பெறுகின்றன. என்ஸைம்களில் தொகுப்புகளை இணைத்திருக்கும் முறை என்ஸைம்களது அமைப்புக்கும்,