இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

உயிரின் தோற்றம்


போன்ற கரைசலில், அதன் இயங்கு சமநிலையைக் குலைக்காத முறையில் என்ஸைம்களின் வினைஊக்கி வேகங்கள் இருந்தா லொழிய என்ஸைம்களின் வினை ஊக்கி வேகத்தால் பயனில்லை.

முதல் கோயசர்வேட்துளியில் அதனுள் நிகழும் மாறுபாடுகளிடையே, ஓர் ஒழுங்கும் பரஸ்பரத் தொடர்பும் வளர்ச்சியுறவில்லை. சூழலிலிருந்து கிரகிக்கப்பட்ட பொருள்களும், துளியினுள் உண்டாகும் கழிவுப் பொருள்களும், பல மாறுதல்களை வெவ்வேறு விதங்களில் நிகழ்த்துவது சாத்தியமாக இருந்தது. சிலவேளைகளில் இப்பொருள்களின் சேர்க்கையால் உண்டாகும் சில பொருள்கள் துளிகளின் வளர்ச்சிக்கு ஆக்கமளித்தன. வேறு பகுதிகளில் மாறுதல்கள் ஏற்பட்டு துளிகள் அழியக்கூடிய நிலை ஏற்பட்டது. அப்பொழுதுதான் கூட்டு மாறுதல்கள் இணைக்கப்பட்டு ஒருதிசையில் நிகழத் தொடங்கின. மேலும் மேலும் கூட்டுமாறுதல்கள் நிகழ்ந்தன. இயங்கு சமநிலை உறுதிப்பட்டது துளிகளும் நிலைத்தன;

தனித்தனி குழம்பு போன்ற கரைசல்களை ஆராயும்போது, எந்த வகையிலாவது இப்பொருள் உண்டாகிறதா, அப்பொருள் உண்டாகிறதா என்று கவனிப்பது முக்கியமல்ல. பொருள்கள் கூடி சிக்கலான பொருள்களைத் தோற்றுவிக்கும் போது ஏற்படும், இணைப்பு, ஒழுங்கு, நியதி இவற்றையே கவனிக்க வேண்டும். ஏனெனில் அவைதான் மறுபடியும் அப்பொருள் தோன்றும் நிலையை உண்டுபண்ணும். இவ்வாறு ஒரு புதிய பண்பு தோன்றுகிறது. அதாவது புரோட்டோபிளாசம் தன்னைப் போன்றதைத் தோற்றுவிக்கிறது.

இதனடிப்படையில்தான் குழம்பு போன்ற கரைசலின் அமைப்பில் நிலையான தன்மை ஏற்படுகிறது. புரதப் பொருள்கள் மறுபடியும் ஒழுங்காக உண்டாவது இதனையே காட்டுகிறது. ஒழுங்கற்ற ஓர் இணைப்புக்கு புரத கூட்டணுத் தொடரில் இடமில்லை. ஏனெனில் பல ஒழுங்கான ஒன்றன்பின் ஒன்று வரிசையாக நடக்கக்கூடிய பல மாறுதல்களின் விளைவாக உண்டாவது புரதக்கூட்டணு. முதன் முதல் பல்வேறு வகையில் இணைக்கப்பட்டிருந்த அமினோ அமிலங்கள், ஒழுங்கான அமைப்புப் பெற்ற பின்னரே, புரத உருண்டையாக மாறின.