இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சிலுரியன் காலமென அழைக்கப்படும் கால முடிவில் தற்கால மீன்களைப்போன்ற மீன்கள் தோன்றின. (இது 35 கோடி வருஷங்களுக்குமுன் நிகழ்ந்திருக்கலாம்) ஆழமற்ற கடலில் இவை மிகுதியாகப் பெருகின. தற்கால மகர மீன்

அவை நுண்நோக்கியின் வழியாக மட்டும் காணக்கூடிய ஒற்றை ஜீவ அணு உயிர்களாக இருந்தன. ‘ஸ்பாஞ்ச்’ என்ற கடற்பஞ்சும், அவற்றோடு உறவுடைய ஆர்கியோசிதாய் என்ற பூண்டும் இருந்தன. (2) மெடுஸே, (3) அன்னிலிடா, (4, 5) சகிட்டா, (6) பிராகிபோடா. (7, 8) முதன்முதல் தோன்றிய மொலஸ்க், (9) டிரிலிபைட்கள், முதலியனவும் இருந்தன. அவற்றுள் சில நீரிலும், நிலத்திலும் வாழக்கூடியவை. (10) மற்றவை, கடல் வெள்ளரிக்காய் என்றழைக்கப் படும் ஒரு வகைப்பிராணி சமுத்திரத்தினடியில் ஊர்ந்து செல்லக்கூடியது. (11, 12, 13) நீந்தக்கூடியன.