இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நிலத்தில் உயிர் வாழ்க்கை வெற்றிபெறத் தொடங்குகிறது

25 கோடி வருஷங்களுக்கு முன் உலகில் பெரணிகள், குதிரைவால், கைத்தடிப்பாசி போன்ற தாவரங்கள் இருந்தன. ஏரிக்கரைகளிலும், அவற்றின் கரைகளிலும் பல வகைப் பிராணிகள் ஊர்ந்து நடமாடின. அவை நீரிலும், நிலத்திலும்

வாழக்கூடியவை. அவற்றுள் இயோஜிரினியஸ், பாபிடிஸ் போன்ற சிறு பிராணிகளும் இருந்தன. இக்காலத்தின் முடிவில் நீரிலும், நிலத்திலும் வாழும் பிராணிகளின் வழித்தோன்றல்களாக ஊர்வன தோன்றின. தண்ணிர் கரைக்கு வெகு துரத்திற்கப்பாலும், நிலத்தில் அவை பெருகின.