பக்கம்:உயிரில் கலந்தது.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#13

அப்படி அவள் ஒதுங்கிளுல், என் மன அமைதி பறிபோய் விடாதா? என் காதலில் குறுக்கிட அவளுக்கு உரிமை இல்லே என்று சினிமாக்களில் வருவது போல வாதாடுவது சுலபம். ஆனலும், நான் மனிதாபிமானத்துடன், நன்றி மறவாத மனத்துடன் வாழ வேண்டாமா? என்றாே செய்த உதவிக்கு இன்று நான் என் காதலைத் தியாகம் செய்ய வேண்டுமென்று சட்டமில்லை என்று கூறுவது எளிது. ஆளுலும், என் மனச் சாட்சி என்ன நாளெல்லாம் குதறி யெடுக்குமே, அந்தத் தொல்லைக்கு மரணத்தைத் தவிர, டாக்டரால் எனக்கு வேறு சிகிச்சை செய்ய முடியுமா? தியாகம், தியாகம் என்று நொடிக்கு நூறு தரம் சொல்லியும் பேசியும் எழுதியும் வந்த தாங்கள், இப்போது, என்னைத் தியாகியாக்க ஒரு வாய்ப்பு தந்து, அதன் மூலம் நீங்களும் தியாகியாக ஒரு சந்தர்ப்பத்தை உண்டாக்கிக்கொள்ள மறுக்கிறீர்களே, ஸார் நீங்கள் முன்பு எழுதியது மாதிரி, காதல் என்பது சிறுபிள்ளைகளின் பொப் விளையாட்டு ஸார் என்னை மறந்துவிடுங்கள்; நம் காதலையும் மறந்துவிடுங்கள். என்மீதுள்ள மயக்கம் காரணமாக, என் உயிர்த் தோழி தவசீலியின் குணநலத்தைத் தவருகப் புரிந்து கொள்ளாதீர்கள். நான் ஒரு சொட்டுக் கண்ணிரை அவள் முன் காட்டியிருந்தால்கூட, அவள் என்றாே தன் மணக்காதலே விட்டுக் கொடுத்து ஒதுங்கியிருப்பாள். ஆனால், நான் அப்படிச் செய்யவில்லை. ஏன் தெரியுமா? என்னைக் காட்டிலும் அவள் உங்களை இன்னும் பக்திபூர்வமாக நேசித்ததை அறிந்தேன். எழுத்துப் பித்துக்கொண்ட அவளே உங்களுக்கு உகந்த ஜோடி என்பதையும் உணர்ந்தேன். அதன் பிறகு, நான் வாயடைத் துப் போனேன். எனக்கும் உங்கட்கும் இடையில் நிலவிப் பூத்த காதல் மலரை அவளுக்குக் காட்டாமல் மறைத்தேன், நடக்கவிருந்த திருமணம் ஏதோ இயற்கை வசமாகவே நிகழப் போவதாகவும் சொன்னேன். உங்களை தளசீவியின் நீதிப் பொருளாக ஆக்கித் தருவதாக அவளிடம் வாக்குக்கொடுத்து, அவளே இங்கு வரும்படியும் தூண்டிவிட்டுத்தான் நான் இப் பொழுது வந்திருக்கிறேன்!”