பக்கம்:உயிரில் கலந்தது.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9


வெள்ளித் தட்டில் அடுக்கி வைத்துவிட்டு, அவற்றைத் தொலைவிலிருந்து படம் பிடித்தாற் போன்ற பாவனை ஒடியது அவருள். எஞ்சிய விதானத்திரை முழுவதும் ஒரே சிவப்பு. நஞ்சுக் கொடியின் உறவை விடாமல், தாயைத் தஞ்ச மடைந்த அந்தப் பாசக் கொடியைத் துணை கொள்ளாமல், பிரசவ அறையிலே கிடந்து குவா, குவா என்று குரலெழுப்பி, கால் உயர்த்திக் கிடக்கும் பச்சை மண்ணின் குதிகால்ச் சிவப்பின் உவமையை உருவகப்படுத்திக் காட்டிற்று அவருக் குரிய இலக்கிய மனம்.

காப்பி குடித்ததாக அவர் தம்முள் தினத்துக் கொண் டார். ஏனென்றால் சுவர்க் கடிகாரம் மணி நான்கு-இருபது என்று உரைத்தது. காலியாக இருந்த கண்ணுடிக் கிளாசை எடுக்க ராதா வந்து நின்குன். ஒவ்வொன்றுக்கும் மண்டையைப் போட்டு உருட்டிக் கொள்ளலாமா? இல்லை, அப்படி உருட்டிக் கொள்ளத்தான் முடிகிறதா?

புறப்படவேண்டிய நேரம் வந்து விட்டது. “அண்ணு, ஆபீஸ் தபால் ஏதாகிலும் இருக்கா? உங்க சொந்த லெட்டர்.” .

  • சொந்த லெட்டர்’ என்றதும் தான், ஞானசீலனுக்கு ஒரு விஷயம் சிந்தையில் குதித்தது. கடலூரிலிருந்து உறவினர் ஒருவர் கடிதம் போட்டிருந்தார். விஷயம் முக்கியந்தான்அதாவது அவர் வரையில்! விளைவும் முக்கியந்தான்-இவர் வரையில்! ஆனல் இருவர் கணிப்பும் முடிவும் நேரெதிராக இயங்கின. - .

தோல்ப்பையை பையத் திறந்தார் அவர். ஒரு காகிதத் தாள் துருத்திக்கொண்டு வந்தது. ஏற்கனவே பார்த்து முடித்த உள்ளடக்கமானதால், மீண்டும் அதைப் படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனலும் இத்தகைய இயல்பான நியமங் களுக்கு இந்த மனித மனம் எப்போதுமே அமரிக்கையாகத் தலைவணங்கி விடுமென்று சொல்லமுடிகின்றதா, என்ன? ஞான சீலன் அக்கடிதத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்தார்: