பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 103 வளர்ச்சி பெற்ற நாடுகளில் பன்னிரண்டு விழுக்காடு மணம் புரிந்த பெண்கள், இத்தகைய ஆண்களின் பாதுகாப்பு சாதனங் களின் பலனாலேயே கருத்தரிப்பைத் தடை செய்து கொள் கின்றனர். ஆனால் நாடு முழுவதும் இச்சாதனம் எல்லா எளியவர்களும் பயன்படுத்த இலவசமாக வழங்கப்பட்டாலும், 4 சதவிகிதம் ஆண்களால் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகத் தகவல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தச் சாதனங்கள் பால்வினை நோய்களைப் பரவ விடாமல் தடுக்கும். இதுவே இப்போது 'எய்ட்ஸ்' என்ற தேய்வு நோய் பரவாமலிருக்கும் தடுப்புச் சாதனமுமாகும். சரியோ, தப்போ சேறும் சகதியுமான குட்டைக்குள் சமுதாயம் விழுந்துவிட்டது. அடித்தளமோ, மேல்தளமோ, மீட்சி பெற துரும்பு கிடைத்தாலும் பற்றிக்கொள்ள வேண்டும். சேற்றுக் குட்டையிலேயே முக்குளித்துக்கொண்டு அரசியலையும் அதற்குள் இழுத்துக்கொண்டிருப்பதில் மேலிப்பவருக்கும் மீட்சி இல்லை; உள்ளே இருப்பவருக்கும் மீட்சி இல்லை. இந்த நிலையில் தான் இன்று, தனிநபர் என்ற அடிப்படையைச் சுத்தமாகத் துடைத் தெறிந்துவிட்டு, அரசு முழுமூச்சுடன் செயல்படத் தொடங்கி இருக்கிறது. இந்தச் செயல்பாடுகளில் ஒன்றுதான், பரம்பரை பரம்பரையாகக் கிராமங்களில் பிரசவம் பார்த்த மருத்துவச்சிகள், சுகாதாரமற்ற கருக்கலைப்பு முறைகளை அறிந்திருக்கின்றனர். மேலும் இப்போதெல்லாம் காய்ச்சல், தலைவலி, கண்வலி என்ற பல உடல் உபாதைகளுக்கும் அடித்தள வறுமையில் இருக்கும் மக்கள் ஒரு தடவைக்கு முப்பது, நாற்பது என்று கணக்கிட்டு 'ஆண்டிபயோடிக் வகை மருந்துகளை எழுதிக் கொடுக்கும் மருத்துவர்களிடம் செல்வதில்லை. அநேகமாக மருந்துக்கடைக் காரரே மருந்து தந்துவிடுகிறார். தலைவலியோ, பல்வலியோ, கண் உறுத்தலோ, உடனடி நிவாரணம் தரும் அலோபதி மாத்திரை மருந்துகளைத் தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்கள் அன்றாடம் இவர்களுக்கு அறிவுறுத்துகின்றன. இவற்றுக்குப் பின்விளைவு இருக்குமா, இந்த மருந்துகள் காலாவதியான மருந்துகளா என்றெல்லாம் எந்த விழிப்புணர்வும் இவர்களுக்கு இல்லை. மருத்துவர் அறைக்குச் சென்று வரிசையில் நின்று,