பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ வதைபடும்... - 106 அரசின் அணுகுமுறை எப்படியேனும் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நியாயத்தில் இருப்பதால்தான், எப்படியேனும் கிராமத்திலிருந்து அறியாமையில் ஊறிய பெண்களைத் தரகர்கள் மூலமாகப் பொருள் கொடுத்து, சிகிச்சை முகாம்களுக்குக் கொண்டு வருகிறார்கள். அறுவைச் சிகிச்சைதான். ஒரு பெரிய மகப்பேற்றுப் பொதுமருத்துவமனையில் பணிபுரிந்து ஒய்வு பெற்றிருக்கும் பெண் மருத்துவர், 75-80 கால கட்டங்களில் தாம் பொறுப்பாற்றச் சென்ற முகாமைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டார். தரகர்கள் மூலம் பணம் இருநூறு போய்ச் சேர்ந்துவிடுகிறது. இளம் மருத்துவர்கள் உற்சாகமாக அறுவைச் சிகிச்சைக்குத் தயாராக இருந்தார்கள். ஆனாலும் அறுவைச் சிகிச்சைக்கு முன் அவர்கள் நிச்சயமாக முன்பரிசோதனைக்கு உட்ப டுத்தப்பட்டிருக்க வேண்டும். வழக்கமான நீர் பரிசோதனை, சர்க்கரை அல்புமின் போன்றவற்றுக்கான பரிசோதனைகள் மிக அவசியம். முகாமுக்குக் கொண்டு வருவதற்கு முன், பெண்களிடம் இதன் பயன்கள், மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் எல்லாமும் தெரிவிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், இளம் மருத்துவர்கள், அந்த அறியாப் பெண்கள் எந்த வகையிலும் மாறுபட்ட கவனக்குறை வால் பாதிக்கப்படக்கூடாது என்ற கருத்தோடு சிகிச்சையில் ஈடுபட் டிருக்கவில்லை என்ற நிலையை அறிந்து கண்டித்ததாகக் கூறினார். ஒவ்வொரு பெண்ணும் தனித்த இயல்புடையவள். அந்த வகை யில் கூர்ந்த கவனத்துக்குரியவளே. ஆனால், இத்தகைய முகாம் களில், சிகிச்சைக்குப் பிறகு சில மணி நேரம் தங்கினாலே போதும். மயக்கமருந்து அதிகம் தேவையில்லாததால், மருத்துவமனையில் அதிக நேரம் தங்க வேண்டாம். அநேகமாக இதற்கென்று அமைக்கப்பெற்ற முகாம்களில் மாவட்ட சிகிச்சை மையங்களில் இந்தச் சிகிச்சை செய்யப்படுகிறது. 4-6 மணி நேரத்துக்குப் பிறகு தேவையான எளிய கஞ்சி போன்ற உணவு கொடுக்கப்படும். பின்னர் கிராமங்களில் கொண்டு விட்டுவிடுவார்கள். 'இது கூடாது, அது கூடாது' என்று அச்சுறுத்துவதில்லை. ஆனால், பின்னர் தொடர்பு - தொடர்ந்த கண்காணிப்பு கேள்விக் குறிதான். அடுத்த மாதவிலக்கு வரும்வரையிலும், காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல், இத்தகைய சறுக்கல்களின் விளைவைத் தடுக்கும் எளிய சிகிச்சைகள் இந்நாட்களில் தோன்றி யிருக்கின்றன. ஒரு வகையில் இவையும் கருச்சிதைவு போல்