பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 115 பெண்கள். ஐயோ, பாவம் என்று மூக்கைச் சிந்தி அழுகையில் ஒன்றி மேலும் மேலும் ஊக்குவிக்கப்படலாம்! இதுவே பயன்! 19 . அரசியல் பிடிகளில் குடும்ப நலங்கள் கிராம சுகாதாரச் செவிலியர் முந்நூறு பேர் போய் மாவட்ட மையத்தில் கூடியிருந்தனர். கிராமங்களில் தாய் - சேய் நலம், பொதுச் சுகாதாரம், தடுப்பூசி - சத்துணவு - பால்வாடி என்ற காப்பகங்கள், பிரசவங்கள், தாய்மையுடனும், பெண்களுக்கான அறிவுரைகள் போன்ற பல செய்திகளையும் இந்த மாதாந்திரக் கூட்டங்களில் இவர்கள் தங்கள் துறை நிர்வாக அலுவலருடன் விவாதிப்பதாகக் கொள்ளலாம். இது பெரும்பாலும் ஒரு வழக்கமான கூட்டமாக முடிவடையும். கிராம மையங்களுக்கான மருந்துகள், மாத்திரைகள், சத்துமாவு, பால் பவுடர் போன்ற பொருட்களைப் பெறுதல் ஆகிய கணக்குகளும் இங்கே ஒப்புதல் பெறப்படும். பஞ்சாயத்து அமைப்பின் தலைவர்களும் இங்கே இடம் பெற்றிருந்தனர். இந்தப் பிரதேசங்களில் பெண் சிசுக் கொலை நடைபெறுவதைப் பஞ்சாயத்தார் நிர்வாகத்தினர் ஒப்புக்கொண்டே இருந்ததாகச் சொல்லலாம். இதைக் கிளறி விடுவதுபோல், ஆட்சி அலுவலர் அனுமதியுடன் ஒர் ஆய்வாளர் போய்ச்சேர்ந்தார். 'ஏனம்மா, இந்தப் பக்கங்களில் பெண் குழந்தைப் பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக இருக்கிறதே? காரணம் என்ன? சொல்ல முடியுமா?” ஆய்வாளர் நாகரிகமாகச் சுற்றி வளைத்தார். எந்த மறுமொழியும் யாரிடமிருந்தும் வரவில்லை. மூன்று முறைகள் இதை வெவ்வேறு விதங்களாகக் கோரினார். கூட்டத்துக்குத் தலைமை வகித்த ஆண் அலுவலருக்குப் பொறுக்கவில்லை. இப்படி எல்லாம் கேட்டால் பதில் வராது. "ஏம்மா? பொட்டபுள்ளங்களக் கொல பண்ணாத கிராமம் எதுனாலும் இருந்திச்சின்னா சொல்லுங்க!” ஒரே ஒரு பெண் மட்டும் கைதுக்கினாள். அவள் ஒரு சுகாதாரச் செவிலி.