பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../அரசியல்... 120 அறிவுரை சொல்வது வழக்கம். மக்கள் பெருக்கத்தைச் செயற்கை முறையில் கட்டுப்படுத்துவதும், இழப்பு ஏற்பட்டால் மீண்டும் பெண்ணைச் சிகிச்சைக்கு உட்படுத்துவதும் சமுதாயச் சிக்கல் களையே அதிகமாக்கிக் கொண்டிருக்கின்றன. காலையில் இருந்து மாலைவரை கருக்கலைப்பு மையங்களைத் திறந்து வைப்பதாலும், இதற்கென்று மட்டுமே பயிற்சி பெற்றவர்கள், நவீன உத்தி கொண்டு கருக்கலைப்பு செய்வதால் பெண்மை நலிந்து போகிறது. 'பெண்ணைச் சக்தி மிகுந்தவர்களாக்குவோம்’ என்ற கோசம் வெறும் பொருளாதாரச் சுயசார்பு மட்டும்தானா? இதற்கு ஆதாரமாக இருக்கும் ஆற்றலே, ஆண் ஆதிக்கங்களை எதிர்த்து வெல்லும் பேராண்மை வேண்டும். கருக்கலைப்பு நிலையங்களில் திருமணம்' என்ற உரிமை பெறாதவர்களும், கல்லூரிக் கன்னியரும், ஏமாற்றத்துக்கு உள்ளானவர்களுமே வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. தவறு என்ற செயலுக்கு ஒரு பெண் உட்படுத்தப்படும்போது அந்த விளைவை அவள் ஏற்க ஆண் ஆதிக்க சமுதாயக் குடும்பங்கள் துணிவு கொடுப்பதில்லை. அவள் உயிருக்கு உலை வைக்கிறது இது. மார்ச் 6ம் தேதி புத்தாயிரத்தில் ஐந்தாம் வருடம். இப்படி ஒரு செய்தி. ஒரு பெண் (முப்பது வயது) கணவரை இழந்தவள். ஒரு மகள் பனிரெண்டு வயதில் பள்ளியில் படிக்கிறாள். இந்தப் பெண்மணிக்கு நாற்பத்தைந்து வயதுடைய ஒருவரின் தொடர்பு ஏற்பட்டது. (அவர் திருமணமானவரா, குடும்பத்தில் உள்ளவரா என்ற விவரம் செய்தித்தாளில் குறிப்பிடப்படவில்லை. ஏனெனில் அவர் யாராக இருந்தாலும் பாதிப்பு அவருக்கு இல்லை!) விளைவு, அவள் கர்ப்பம் அடைந்தால் வெளிக்குத் தெரியக்கூடாதே! ஒரு ஹோமியோபதி மருத்துவரை அணுகினாள். ஹோமியோபதி மருத்துவத்தில் நிபுணராக இருந்த ஒருவரிடம், கருக்கலைப்பு மருந்து பற்றிக் கேட்டபோது, கர்ப்பம், மங்களம். கருக் கலைப்புக்கென்று விதிக்கப்பட்ட மருந்து இல்லை என்று கருத்து ரைத்தார். எனவே இந்த ஹோமியோபதி மருத்துவர் சில ‘கோல’ மாத்திரைகள் தந்தார். கரு கலையவில்லை. சிக்கல் நேரிட்டது. அவளை அப்படியே விட்டால், அவள் குடும்பத்துக்கும், அவளுக்கும் கெட்ட பெயரா? அல்லது அவன் குடும்பத்துக்கோ அவனுக்கோ கெட்ட பெயராகுமோ? விளைவு அவளைத்