பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 121 தனிமையில் எரியூட்டிக் கொன்று, புதரில் இழுத்துப் போட்டு விட்டார்கள். காவல்துறைக்குத் தெரியவந்து அந்த ஆண் மருத்துவர், மேலும் இரண்டு பெண்களையும் கைது செய்திருக்கின்றனர். மார்ச் 8, வாழ்க! அனைத்துலக மகளிர் தினம், கால் நூற்றாண்டுக்கு முன் பொதுவுடமைக் கட்சி ஆட்சி நடந்த இடங்களில்தான் கொண்டாடப்பட்டது. உலக சமுதாயத்தில் சரிபாதியுள்ள மகளிர் ஆணாதிக்க கோட்பாடுகளில் இருந்து மீண்டு உரிமை கோரும் நாள் என்று கொண்டாடப்பட்டது. அந்நாள் விடுமுறையாகவும் இருந்தது. ஆனால் இந்நாள் மார்ச் 8, போராடப் பெற்று வரும் உரிமைகளை வஞ்சகமாகக் காலில் போட்டு மிதிக்கும் தந்திரங் களில் மகளிரைச் சிக்க வைப்பதாக இருக்கிறது. மார்ச் 8, பெண்கள் உரிமை வாரம் உங்கள் ஆடை, ஆபரணக் கண்காட்சி! வாருங்கள்! தள்ளுபடி உண்டு! அழகு சாதனப் பொருட்கள்; வெளிநாட்டின் உன்னத நிறுவனத் தயாரிப்புகள், தள்ளுபடி விலையில்! உங்கள் உடலைக் கவர்ச்சிகரமாக வைத்துக்கொள்ளுங்கள்! அழகு ராணிகள், பெயர் பெற்ற நடிகையர், உங்களிடம் தங்கள் கவர்ச்சி ரகசியங்களைச் சொல்வார்கள். இந்த விளம்பர நிறுவனத் தின் வினாக்களுக்கு விடை எழுதி அஞ்சலட்டையில் அனுப்புங் கள். இலவசமாக உங்களுக்கு ஒப்பனை - முகம், கை கால் நகங்கள், பற்கள், கண்கள் வசீகரமாகத் திகழ புதிய வடிவம் பெறுவீர்கள்! 'மாடலிங் பயிற்சி தமிழை ஆங்கிலமாகப் பேசவும், கொஞ்சிக் கவர்ச்சியை அள்ளி வீசவும், உடல் மறையாத புதிய வடிவமைப்பு ஆடைகளை அணியவும், பூனை நடை நடக்கவும், கட்டிப் பிடித்தும் பிடிக்காமலும், உதடுகள் குவிய (முத்தம் கொடுக்கவும்) கவர்ச்சி காட்டவும், மொத்தக் கட்டணத்தில் முப்பது சதவிகிதத் தள்ளுபடியுடன் பயிற்சி அளிக்கப்படும். திரையுலகக் கனவு மெய்ப்படும் நாள் விரைவில் கூடும். இந்த வாரம், மகளிர் வாரம்! இன்னொரு விளம்பரம். வீட்டுக்குப் பயன்படும் அனைத்துப் பொருட்களும் சலுகை விலையில். அடுப்புகள், குக்கர்கள், காபி மேக்கர்கள், பழம் பிழிபவை, ஈர அறவைப் பொறிகள், விட்டலங்