பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 131 உடல்நலங்களைக் கண்காணிக்கும் நிறுவனங்களும் 1992ம் ஆண்டிலிருந்து இம்மருந்தை அனுமதித்துப் பரிந்துரைத்திருக்கிறது. என்றாலும், பெண்கள் கூட்டமைப்புகள், டெபோ - ப்ரோவரா, நெட் இன் மருந்துகளைக் கருத்தடைச் சாதனங்களாகப் பயன்படுத்துவது, மகளிர் உடல் நலத்துக்கு உகந்ததல்ல என்று எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். பிரிட்டனில் இது மிகவும் கட்டுப்பாடு களுக்குட்பட்டே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இன்னமும் தேசிய குடும்ப நலத்திட்டத்தில் ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கவில்லை என்றாலும், இந்த இரு ஊசிமருந்துகளும் கடைகளில் கிடைக்கின்றன. இந்த மருந்துகள் உலக முழுவதும் கருப்பைச் சுவர் - சவ்வுகளில் ஏற்படும் பல்வேறு கோளாறு களுக்கு - புற்றுநோய் உட்பட - மருந்தாக மட்டுமே உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இந்த மருந்துகள் கருத்தடைச் சாதனங்களாகப் பயன்படுத்தப் படும்போது சாதாரணமாக ஏற்படக்கூடிய பின் விளைவுகளை மருத்துவர் அல்லது (மருந்துக் கடைக்காரர்) வெளிப்படையாகத் தெரிவிப்பதில்லை. ஆனால், உடல் பருமனாவதும், ரத்தப் போக்கு, அல்லது மாதவிலக்கு ஒழுங்கீனமாதல் மிகக் குறைந்த சதவிகிதத்தினருக்கு மட்டுமே ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. இதைப் போல், தோலுக்கடியில் வைத்துக்கொள்ளும் 'நார்ப்ளான்ட்" என்ற கருத்தடைச் சாதனம், அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவும் முழங்கைக்கு மேலோ, கீழோ, தோலுக்கடியில் செலுத்தப்படும் மருந்துக் குச்சியே. இது இரண்டு குச்சிகளாகவும் விசிறி போல் வைக்கப்படும் ஆறுகுச்சி களாகவும் தோலுக்கடியில் இருந்து குறிப்பிட்ட காலத்துக்குக் கருத் தரிப்பைத் தடுக்குமாம். இது கருப்பைச் சளிச் சவ்வைத் தடிக்கச் செய்து விந்தணு உட்புகாமல் தடுக்கும்; சினைமுட்டை முதிர்ந்து வராமல் தடுக்கும்; கருப்பைச் சுவரில் சினைமுட்டை கருவாகிக் கவ்விப்பிடிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இத்தகைய சாதனங்கள் பெண்களின் உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிப்பவை என்று மருத்துவர்களி டையே சர்ச்சைகளும் நீதிமன்ற வழக்குகளும் தொடர்பான ஊடகச் செய்திகளும் எழுப்ப பிரிட்டனில் 1999ல் தடை செய்யப்பட்டன.