பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் a 135 இருக்குமா? பிளாஸ்டிக் குடத்தில் நீர் அடித்துச் சுமந்து வரும்போது மணல், கலவை சுமை சுமந்து படியேறும்போது அவள் படும் இன்னல்கள் தீர்க்கப்பட்டிருக்கின்றனவா? எல்லாப் பெண்களுமே ஏதேனும் ஒரு வகையில் அழுத்தம் அனுபவிப்பதால், இன்பப் பங்கீடோ, துன்பப்பங்கீடோ, பெண்ணுக்குப் பெண் ஏற்பட வழியில்லாமல் போகிறது. இந்தப் பிரித்தாளும் நுட்பங்களே ஆணின் ஆதிக்கங்களுக்கு வலிமை சேர்க்கின்றன. அழுத்தக் கலனிலும் நவீன அடுப்புகளிலும் ஆண் சமைப்பதில்லை. எந்த வசதிக்கும், பின்புலம் உண்டு. விறகு சுள்ளியை வைத்து எரியவிட்டு, ஒரு சோற்றை வடித்து, ஏதோ ஒரு கறி - குழம்பு வைத்த எளிமையில், எத்தனை சிக்கல்கள்? அழுத்தக் கலன் பராமரிப்பு, அடுப்புப் பராமரிப்பு, எல்லாமே சமயத்தில் அவளைக் கவிழ்க்கும். சந்தையில் நேற்று வாங்கின. பொருளுக்கு இன்று உதிரிகள் இருக்காது. பழையதைக் கொடுத்து புதிய பளபளப்பைப் பெறுங்கள் என்று தந்திர வாணிபங்கள் இவள் தலையில் விடியும்! வசதிகள் எதுவுமே வசதிகள் இல்லை என்பதைக் கருத்தடைச் சாதனங்களில் இருந்து காய்கறி நறுக்கும் சாதனம் வரையில் பெண்ணைப் பொறிகளில் சிக்க வைக்கும் தந்திரங்களே என்பதை மெய்யாக்குகின்றன. எந்த வசதியும் சிக்கலுக்கான எந்தத் தீர்வு முயற்சியும் ஆண் - பெண் இருபாலரையும் கடமைப்பட்டவர் களாகச் சமமாகப் பங்கேற்கச் செய்யும்வரை, தீர்வு முழுப் பயனையும் காட்டாது. அசுரர்கள் 22. தொலைக்காட்சி தெ Tலைக்காட்சியின் உபயங்களைச் சொல்லாமல் பெண் தொடர்பான எந்த ஒரு நியாய, அநியாயத்தையும் கூற முடிய வில்லை. தேவதாசி முறை ஒழிந்துவிட்டது. ஆனாலும், பெண் வாணிபத்தைத் தொலைக்காட்சி ஜாம் ஜாம்' என்று நடத்திப் பணம் குவிக்கும் கோடி புரளும் வாணிபங்கள் நடக்கின்றன. இதில் முக்கியமான சாதனம் சினிமாவில் இடம் பெறும் பெண் - உடலை மையமாகக் காட்டும் ஆட்டம் பாட்டங்கள். இந்த நிகழ்ச்சிகளுக்கு வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி வெல்லப்பிள்ளையாருக்கே