பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ ஹறி/ந்து... 170 பெருமை கொள்கிறோமே? ஆனால், இந்த முன்னேற்றங்கள் எந்த அடிப்படையில் நிகழ்ந்துள்ளன? எம் பெண்களும், குழந்தைகளும் இருத்தலுக்குப் போராடிப் பிழைக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இல்லையென்றால் முன்னேற்றம் கேள்விக் குரியதே! உத்தரப்பிரதேசத்தின் உண்மை நிலை : தற்செயலாக உத்தரப்பிரதேசத்திலிருந்து வந்த ஒரு சுகாதார ஆர்வச் செயலரைச் சந்தித்து இந்த வாரம் விவரம் அறிந்தபோது, பகீரென்றது. அங்கு பெண்களுக்கு மாநிலத்தில் சுகாதாரம் சார்ந்தும் மருத்துவம் சார்ந்தும் இழைக்கப்படும் கொடுமைகளைக் கேட்க முடியவில்லை. ஏதேனும் பிராந்திய மொழி இதழில் இதுபோன்ற செய்தி விவரம் வெளியாகும். ஆனால், அதற்கு எந்த உயிரும் இருக்காது. தேசிய அரங்குக்குப் பத்திரிகை வட்டத்துக்கு எட்ட வழியில்லை. ஆனால், இந்த விவரங்கள் விரிவாக நாடு முழுவதும் கவன ஈர்ப்புப் பெற முக்கியத்துவம் பெற வேண்டும். அப்படிப் பார்த்தால் மிகத்திறமையாக நிர்வாகம் செய்யப்படும் மாநிலங்களில் கூட பல உத்தரப்பிரதேசங்கள் இருக்கலாம்! உத்தரப்பிரதேசத்தில் கருத்தரித்த மகளிருக்கு ஏற்படும் சிக்கல்களால், ஆண்டுதோறும் 40 ஆயிரம் பெண்கள் மரிப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. வயதும், எடையும், மிகக் குறைவாக இருக்கும் நிலையில் கருத்தரிக்கும் பெண்கள், ஆபத்தான விளைவு களை வரவேற்கக்கூடியவர்களே. இத்துடன் பாதுகாப்பற்ற கருச்சிதைவுகளுக்கும், அவர்கள் இரையாகின்றனர். ஒரு புள்ளிவிவரம், இந்திய நாட்டிலேயே மிக அதிகமாக ஆண்டுக்கு இருபது லட்சம் கருச்சிதைவு நிகழுவதாக உத்தரப் பிரதேசத்தை உச்சியில் வைக்கிறது. இதேபோல் பாது காப்பற்ற கருச்சிதைவுகளின் விளைவாக 15 லிருந்து 30 சதவிகிதம் பெண்கள் உத்தரபிரதேசத்துத் தாய் மரணக்கணக்கில் ஏற்றம் பெறுகின்றனர். குருதிப் பெருக்காலும், நச்சுத் தொற்று விளைவுகளாலும் காயங் களாலும் பெண்கள் மடிகின்றனர். ஆனால், இந்த மரணங்களுக்குக் காரணமானவர்கள் என்று எவரும் கணக்கில் வருவதில்லை! இந்த மரண நிகழ்வுகளைப் பற்றிய ஆய்வறிக்கைகள், பல பெண்கள் தன்னார்வக் குழுக்களினால் சேகரிக்கப்பட்ட தகவல் களின் அடிப்படையில் வெளிப்பட்டிருக்கின்றன. 'ஸஹயோக்”