பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 173 பெருக்கத்துக்கான காரணங்களை வெளிக்குக் கொண்டுவர மாட்டார்கள். பொருளாதாரம் சார்ந்த முழு முன்னேற்றம், கல்வி, நலம் பேணும் தீவிர முயற்சிகள், மகளிர் உரிமைகள் குறித்த அக்கறை, இவை அனைத்தும் கவனங்களுக்குள் வராத நிலையிலும், உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி பல பிரதேசங்களிலும் நிகழும் அவலங்கள், மக்கள் தொடர்பு சாதனங்களுக்கோ, அல்லது அரசு தேசியக் கொள்கைகளை உருவாக்கி நெறிப்படுத்துவதற்கோ தெரியாமலே போகலாம். 4. உலக சுகாதார அறிக்கை - 2005 (சஞ்சிதா சர்மா), புதுடெல்லி - ஏப்ரல் 7 கருக் கொலை தவிர அலட்சியமும் கவனிப்பின்மையுமே, ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளை அழித்து விடுகிறதெனலாம். இது இந்தியா, சீனம் இரண்டு நாடுகளுக்குமே பொது நடப்பியலாக இருக்கிறது. ஏனைய நாடுகளை விட, அதிக மக்கள் பெருக்க நாடுகள் இவை. உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையின் விவரப்பட்டியலில் இத்தகையதொரு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகிறது. மக்கள் நலம் சார்ந்த புள்ளியியல் கணக்கின் படி, பெண்குழந்தைகள் பிறந்தபின், எந்தளவுக்கு ஆண் மேலாதிக்க உணர்வுகள் அக்குழந்தைகளின் இருத்தலையே கேள்விக்குறியாக்கி இருக்கின்றன என்ற உண்மை சுடுகிறது. சாதாரணமாக இயல்பாகவே ஆண் குழந்தைகளைக் காட்டிலும், பெண் குழந்தைகள் வாழ்வதற்கான வலிமை பெற்றவர்கள். இயற்கையே இப்படிப் பெண்ணுக்கு வாழ்வை உறுதிப்படுத்தி இருக்கிறது. ஆனால் ஐந்து வயது நிரம்புவதற்குள் அதிகமான பெண் குழந்தைகளே மரிக்கின்றன. இதற்குப் பெண் குழந்தை களுக்கு உரிய பராமரிப்பும் கவனமும் கொடுக்கப்படுவதில்லை; ஆண் குழந்தைகளே மிகுதியாக விரும்பப்பட்டு உரிய கவனம் செலுத்தப்படுகின்றன என்று ஜெனிவாவிலுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் உதவி டைரக்டர்ஜெனரல் ஜாய் ஃபுமாஃபி காரணம் கூறியிருக்கிறார்.