பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ வேள்வி... 32 உலகெங்கும் அடிமைகளை யாரும் வளர்த்ததில்லை. அவர்கள் சந்தைகளில் விற்பனைக்கு, ஏல விற்பனைக்குப் போவார்கள். அவர்களில் எவரும், மண்ணுக்கு உரியவர்களாக இருக்கமுடியாது. சந்ததி வேண்டிய மகாராணி, மரித்த குதிரையின் அருகே படுத்துக் கொள்வாள். பிரும்மசரியம் முதிர்ந்த ஆற்றலுடன் முதன்மைப் புரோகிதர் வருவார். இந்த வேள்விகளின் உட்பொருள், புனிதமான, அரசிகள் குருக்கள் கூடல்தான். புனித என்பதன் பொருள் அவள் உள்ளும் புறமுமாக விழைந்து முழுமையாகக் கலவியை ஏற்று ஈடுபட வேண்டும். பெண்ணே குழுத்தலைவியாக இருந்தபோது, விழைவை அவள்தான் ஆணிடம் தெரிவிப்பாள். அவள் மூன்று விரல்களைக் காட்டி தாய்மைப் பேற்றுக்கான அடையாளம் காட்டுவாள். ஆண் அவளுடன் கூடுவான். இதெல்லாம் ஆண் அவளுக்கே அவள் உடலின் மீதான உரிமையை ஆதிக்கத்தால் தகர்த்தபின் வழக்கொழிந்தன. ஆனால், ஆண் தன் ஆளுகைக்குள் அடக்கிய நிலையில் அதை ஆக்கிரமிப் பாகவே அவள் ஏற்கிறாள். அவள் விழைவு அழிகிறது. உள் மனதின் வெறுப்பு, சந்ததிச் செழிப்புக்கேற்ப மலருவதில்லை. மன்னன் பூமண்டலத்தின் சக்கரவர்த்தி என்று குதிரையை அனுப்பி தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தலாம். ஆனால், அவன் சந்ததியை ஏற்க அவர்கள் உணர்வுகள் கூம்பிப் போயின. ஹரிவம்சம், யஜூர்வேதம், ஆகிய நூல்களில் இந்த விவரங்களே மந்திரப் பாடல்களில் இடம் பெற்றிருப்பதை, காசிநாத் ராஜ்வாடே, தம் வரலாற்று நூலில் விளக்குகிறார். ரித்விக், கர்த்தா அல்லது இயக்குனர், தயாரிப்பாளர், வழங்குபவர் எல்லாமாகத் திகழ்ந்தனர். மூன்று கட்ட நாடகம் போல இந்தப் பாடல்கள் உரையாடல்களாக விரியும். மரித்த குதிரையின் அருகில் படுத்திருக்கும் அரசி, 'இந்தக் குதிரையே என் விழைவுக்குப் போதும் என்று அவள் சொல்வதாகவும் மரித்த குதிரையுடன் அவள் கூடும் புணர்வு நாடகம், 'போதும் என்ற வெறுப்பின் உணர்விழையை மெல்ல மெல்ல நீக்கி, முழு விழைவையும் துண்டும் வண்ணம் பாடல்கள் அமைந்திருக்கும். இந்தப் பாடல்கள் செயல்ரீதியாக அவள்