பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 39 சந்நியாச தர்மம் என்பது வழி வகுக்கிறது. ஆண் ஆதிக்கம் பொறுப்பற்ற குடியரசாக இந்நாள் இந்தியத் திருநாட்டில் மலர்ந்திருக்கிறது. மகளிர் உரிமை என்பது கானல் நீரே; இந்த ஆதிக்கம், பக்தி இலக்கியங்களில்கூட, ஒருபக்க நியாயத்தையே நிலைநிறுத்துகிறது. சநாதனத் தீண்டாமையை எதிர்த்த பக்தி இயக்கங்கள், சண்டாளனானாலும் திருடனானாலும் விலை மகளிரானாலும் இறைவன் காட்சி தந்து முக்தியளிப்பார் என்பதே நீதி என்று விளக்குகின்றன. உள்ளார்ந்த பக்தி என்பதே, ஆணாதிக்கம் சார்ந்ததுதான். மண்பாண்டம் வனையும் நீலகண்டர், பரத்தையிடம் சென்று வந்ததால் மனைவி கோபித்தாள். தன் எதிர்ப்பை அறிவித்தாள். 'நீர் எம்மைத் தீண்டினால் திருநீல கண்டம்!” என்று அவர் வணங்கும் ஈசன் பெயர் சொல்லி ஆணை யிட்டாள். ஈசனாகிய ஆண் பெயரைச் சொல்லிவிட்டாள். இவள் உலகநாயகியான தேவியின் மீது ஆணை போட்டிருக்கலாகாதா? ஏனெனில் இவர்கள் பக்தியில் ஈஸ்வரியே ஈசனின் ஆணைக்குக் கட்டுப்பட்டவளாயிற்றே? அந்த முருகனை அவள் கருப்பைச் செயல்பாட்டிலா பெற்றாள்? ஈசனின் கண்களில் இருந்த பொறிகள் அல்லவோ, பொய்கையில் வீழ்ந்து, மதலைகளாயின. பக்தருக்கு இரங்காத ஈசனா? வந்தார் திருவோடு ஏந்திய காசாயத்துறவியாக. திருவோட்டை, பக்தனிடம் கொடுத்தார். 'அப்பனே, நான் தீர்த்த யாத்திரை செல்கிறேன். திருவோட்டைப் பத்திரமாக வைத்திருந்து கேட்கும்போது தாரும் என்று சொல்லிப்போனார். போனவர் நெடுங்காலம் முகவரி இல்லாதவரானார். பக்தரும் மறந்து போனார். திடீரென்று ஒரு நாள் வந்தார். அப்பனே, நான் கொடுத்த திரு வோட்டைத்தா' என்றார். பக்தர் தேடினார். வைத்த இடத்தில் அது இல்லை. குடில் முழுவதும் தேடியும், கொல்லையிலும் வாயிலிலும் எங்கும் அது இல்லை. புதிய ஒடு ஒன்று வனைந்து கொடுப்பதாகக் கூறினார். ஆனால், துறவி வேடத்தில் வந்த பரமன் அதுவே வேண்டும் என்று ஒரே உறுதியில் நின்றார். 'நீ கவனமற்று, அதைத் தொலைத்து விட்டாய்!” என்று கடுமையாகக் குற்றம் சாட்டிய போலிச் சிவனடியார், 'நீர் குளத்தில் முழுகிச் சத்தியம் செய்வாயா, தவறாகத் தொலைக்கவில்லை என்று?’ என்று சினம் பொங்கக் கேட்டார். பக்தர், குளத்தில் இறங்கினார், முழுகிச் சத்தியம் செய்யச் சித்தமாக. உஹம்ை, உம் மனைவியின் கைப்பற்றி இறங்கி மூழ்கிச் சத்தியம் செய்ய வேண்டும்!’ என்று அடியார் ஆணையிட்டார். அவரோதிகைத்தார். பிறகு ஆபத்துக்குக் குற்றம் இல்லை என்பது