பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. மக்கள் பெருக்கப் பொருளாதாரம் LDக்கள் பெருக்கமும் பொருளாதாரமும் ஒன்றுக்கொன்று தொடர்பாக உள்ளது என்ற வகையில் மால்தஸ் என்ற அறிஞர் tożssir G3m so353, Glasfreirsos (Principle of Population)<rgöīgo ghirsogo 1798 இல் இங்கிலாந்தில் வெளியிட்டார். ஐரோப்பிய தத்துவ அறிஞர்களின் நோக்கைக் கவர்ந்த இந்த நூலில், இவர் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும்; இல்லையேல், உணவுப் பற்றாக்குறை நேரிடும். விளைவாக, பசி, பட்டினி, நோய் ஆகியவை மக்களின் அழிவுக்கு வழிவகுக்கும் என்று விளக்கியிருந்தார். பஞ்சம், வறுமை இரண்டுமே மனித முயற்சியினால் தடுக்கக் கூடியவை அல்ல; மனிதன் சோம்பியிருந்தால், அத்தகைய விளைவுகளை ஏற்க வேண்டும் என்பதை இயற்கையே விதித்திருக்கிறது என்றும் இயற்கை உற்பத்தி செய்யும் உயிரினங் கள் அதிகமாகும்போது, அதுவே அழிவுக்கான கூறுகளைத் தோற்றுவித்துச் சமன்பாடு செய்துகொள்ளும் என்று நம்பி இருந்தனர். உயிர்களின் தோற்றம், வளர்ச்சி, அழிவு என்ற இலக்குகளின் சமன்பாட்டை இயற்கையே நிகழ்த்திக்கொள்ளும் என்ற விதியில், மனித குல வளர்ச்சியும் அறிவியல் கண்டு பிடிப்புகளும் மனித உழைப்புச் சமன்பாட்டு நெறிகளை அழித்துவிட்டன. மேலும் நீராவி ஆற்றல், மின்னாற்றல் ஆகியவற் றால் ஆலைகளும், தொழிற்சாலைகளும் ஐரோப்பாவில் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தன. காலனியாதிக்கத்துக்குப் புதிய நாடுகளை இரையாக்க ஆதிக்கப் போட்டிகளும் தோன்றின. பிரிட்டன் பெருமளவில் வெற்றி பெற்றது. இந்தக் கால கட்டத்தில், ஒடுக்கப்பட்ட பெண்கள், தொழிலாளர் கிளர்ச்சிகளும் தோன்றின. பிற்காலங்களில் புதிய விடுதலைக் கொள்கைகளைத் தோற்றுவிக்கக் கூடியவர்களாக இருந்த மார்க்ஸ், காந்தியடிகள் ஆகியோரும் அந்த நாட்டில்தான் புதிய நெறிகளுக்கான வித்துகளைத் தேடுபவர்களாக இருந்தார்கள். பிரபல இலக்கிய மேதை பெர்னாட்ஷாவின் ஃபேபியன் குழு (Fabian Society)வினர் உயிரியல் சித்தாந்தத்தில்