பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 47 வழிகளைக் கையாளும்படி பரிந்துரை செய்யப்பட்டதாகவும் தெரியவருகிறது. ஹங்கரியில் கருக்கலைப்பை ஏற்காமல், தாய்மைப் பேற்றுக்கான விடுப்பும், சலுகை வசதிகளையும் அரசு அறிவித்திருக்கிறது. அத்துடன், ஆணுறை, இயற்கையாகக் கலவியின்போது பெண் பின்வாங்கித்தடுத்துக் கொள்ளல் போன்ற வழிமுறைகளையும் கையாண்டு பேறு தவிர்த்திருக்கின்றனர். சோவியத் யூனியனிலும் மற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கருக்கலைப்பு சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டிருந்தது. ஜப்பானில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம், மக்களின் திட்டமாகச் செயல்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஜப்பானிய அரசு நெறிகளை வகுத்து, பயிற்சிக்கும் பிரசாரத்துக்குமான நிதியையும் ஒதுக்கித் தந்திருக்கிறது. ஆனால், அது மக்களின் திட்டமாகவே ஒசையின்றிச் செயல்படுத்தப்பட்டு இருபது ஆண்டுகளில் இரண்டு தலைமுறைகளில் வளர்ச்சியுற்ற ஐரோப்பிய நாடுகள் நூறாண்டுகளில் சாதிக்க முடியாத வெற்றியை அடைந்திருக்கிறது. இங்கு ஆணுறையும் கருக்கலைப்பும் மட்டுமே சாதனங்களாக இருந்திருக்கின்றன. 10. சமுதாய சமத்துவம் சார்ந்த பெண்ணுரிமை சிமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளே, அடிமைத்தனத்தையும் வறுமையையும் வாழவைத்துக் கொண்டிருக்கின்றன. 'பெண் ணடிமை ஆதிக்கப் பிடிகளைத் தளர்த்தாமல், சமுதாய சமத்துவம் என்பது வெறும் பொய்யே. பொதுவுடமைக் கொள்கைகளின் அடிப்படையில் அமைந்த கிழக்கு ஐரோப்பா, சோவியத் ஒன்றியம், செஞ்சீனம் ஆகிய நாடுகளில் பெண்கள் சுதந்திரமாக இயங்கினார் களா என்பது பிரச்னைக்குரிய வினா. சீனத்தில் அந்நாள் மகளிருக்குப் பிறந்த உடனேயே கால்கள் பிணிக்கப்பெற்றன. அதுவே அவள் உரிமைகளைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் நடவடிக்கை. இது உடல் பரமான இம்சை. சீனத்தில் கலாசாரப் புரட்சி வரும்போதே இந்த இம்சைகள் நீக்கப்பட்டன. ஆனால், பெண் குழந்தைகள் வேண்டாம் என்று இன்றும் பெண்கள் நினைக்