பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 61 திருமணம்; பொறுப்புள்ளதாய்மை போன்ற வாசகங்கள் குடும்பக் கட்டுப்பாட்டைப் பெண்ண்ை மட்டுமே குறிப்பாக்கியிருந்தன. பெண்ணுக்குச் சொத்துரிமை கிடையாது; அதனால் ஆஸ்திக்கு ஆண் வேண்டும், ஆசைக்கு ஒரு பெண் இருக்கலாம் என்ற மரபை வலியுறுத்தின. "லூப் வைத்துக்கொள்ளுங்கள். இது இல்லறச் சுகத்துக்குக் குந்தகமில்லை !' - இது ஒரு பிரசார வாசகம். திரைகளில் சிறு குடும்பத்துக்கான பிரசாரங்கள் பெண்களையே குறிப்பாக்கி வீசப்பட்டன. ஆடம்பரச் செலவுகள் செய்ய மாட்டார்கள். சுறுசுறுப்பாக வீட்டில் வேலை செய்வாள். ஒரு பிள்ளை, ஒரு பெண்ணைப் பள்ளிக்கு அனுப்புவாள். மாதாமாதம் அஞ்சலக சேமிப்பு வங்கியில் பொருள் சேர்ப்பாள். கணவன் அலுவலகம் செல்லும்போது சிரித்த முகத்துடன் அவன் கையில் கொண்டு செல்லும் பையையோ, பெட்டியையோ கொண்டு கொடுத்து சிரித்த முகத்துடன் வழியனுப்புவாள். வங்கிகள், பணம் சேமிக்க விளம்பரங்கள் செய்யும். உங்கள் மகளின் திருமணத்துக்குப் பணம் வேண்டாமா? சேமியுங்கள். நகை நட்டுடன் வரதட்சணை கொடுத்து, ஓர் இளைஞர் கையில் அவளைப் பிடித்துக் கொடுக்கும் இன்றியமையாத சேமிப்பு. படத்தில் விவரம். உங்கள் மகன் படிக்க வேண்டாமா? அவன் பொறியியல் மருத்துவம், பயின்று பட்டதாரியாக வரும் கோலம். பெண்தான் குடும்பத்துக்கு அச்சாணி. ஆனால், அவளுக்கு எந்த உரிமையும் இல்லை என்ற மரபு- கருத்து இன்றுவரை உடைக்கப் படவில்லை. ஆனால் வீட்டுக்காக, நாட்டுக்காக அவள் எந்த முடிவையும் எடுக்க முடியாது. அதை அவள் கணவன் எடுத் தாலும் போனால் போகிறது என்று விடலாம். ஆனால் யாரோ மூன்றாம் நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டிராமல் அந்நாடுகளில் தடைசெய்யப்பட்ட கருத்தடைச் சாதனங்களை நம் நாடு எப்படி அனுமதித்தது? இதைக் கேட்கத் தெரியாது அவளுக்கு; அவனும் கை நழுவிவிடுவான். 1969 வரையிலும் இந்நாட்டில் மையத்தில் காங்கிரஸ் (பேராயக்) கட்சியே ஆட்சிபுரியும் நிலை இருந்தது. தமிழ்நாட்டில் அன்றிலிருந்து இன்றுவரையிலும் பிரதேசம் சார்ந்த திராவிடக் கழகங்களின் ஆட்சியே நடக்கின்றன. 1989 இல்