பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 63 மணத் தடைச் சட்டம் ஒன்று. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கல்வி ஒதுக்கீடு, வேலைவாய்ப்புகளின் முன்னுரிமைகள் என்று வரும்போது, அந்தச் சாதியினர் பெருகி, ஆட்சிபிடிக்க வரும்போது, சாதி அமைப்புகள் கட்டுப்பாட்டை ஆதரிக்காது. முன்பே குறிப்பிட்டபடி உழவுத் தொழிலை மேன்மையாகக் கொண்ட, முதன்மையாகக் கொண்ட இந்நாட்டில் வாழ்வாதாரங்களும் சிறந்து, வறுமை வாட்டினாலும் இரண்டு ஆண்பிள்ளைகள் வேண்டும் என்ற மரபு அடித்தளங்களில் வேரூன்றி இருக்கிறது. தமிழ்நாட்டில் மதுரை, சேலம், தர்மபுரி போன்ற மாவட்டங்களில் ஏறக்குறைய கால்நூற்றாண்டாக, பெண்சிசுக் கொலை என்ற குரூரம் நிகழ்கிறது. இதைப்பற்றி ஆய்வு செய்யப்போன பெண்மணி "ஏம்மா, பெண் குழந்தைகளைக் கொல்ல வேண்டும்?' என்று ஒரு கிராமப் பெண்ணைக் கேட்டார். விடை சட்டென்று வந்தது. 'அரசுதான் ייו புள்ள பெத்துக்காதேன்னு சொல்லுதே! 'அரசு பொம்புளப்புள்ளையைக் கொன்னிடுன்னு சொல்லலியே?’ என்று ஆய்வாளர் கேட்டார். 'பொம்புளப்புள்ள வச்சிட்டு என்ன செய்ய? வெள்ளாமயில்ல. வேல இல்ல. அந்த நாளில் இப்படி எல்லாம் இல்ல. மாமன் அத்தை உறவுக்குள்ள கட்டுவம். உப்புப் பொட்டி வச்சிட்டு மால போடுவாங்க. ராவும் பகலும் கேணில தண்ணி இரைச்சி வெவசாயம் செய்யிவம். கேள்வரகு, சோளம், வெள்ளரி, கத்தரி அல்லாம் போடுவம். பொம்புளப்புள்ளி கடாகுட்டி வளர்க்கும். பெருக்கும். அங்கங்க மேய்க்கும். காசு சேத்துக் காதுல பவனா போட்டுக்கும். கட்டி வய்ப்பம். எங்கூட்டுக்காரருக்கு நானே எங்கப்ப ரெண்டாந்தாரம் கட்டிப் பெறந்த பொம்பளப் புள்ளய மருமவ கூட வந்து பேரம் பேத்தி எடுத்த பிள்ள கட்டிவச்ச. ஏன்னா அவ ரெண்டு பெத்துப் போட்டா கொஞ்சம் நிலகூட வெள்ளாம பண்ணலான்னு. இப்ப...? 'டாம் போட்டாங்க. ஒரு கிணறில் தண்ணியில்ல. அவெவ புள்ளய படிக்கப் போடுறா. பருத்தி போட்டு கரும்பு போட்டு, பணம் பணம்னு சம்பாதிக்கிறா. ஊடுநாடு வேலில்லாம சனங்க போவுதுங்க. இங்க கூலி கூடக் கெடக்கில. பொம்புளப் புள்ளியக் கட்ட அம்பது பவுன், நூறு பவுன்றாங்க. எங்கிட்டுப் போவ? எவனேனும் தொட்டுக் கலைப்பா? எதற்கு கள்ளிப்பால், நெல்மணி' என்று கதை முடிகிறது.