பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 75 சிறுவர்களும், சிறுமியரும் சேர்ந்து படிக்கும் பள்ளிகளில் ஏதேதோ பேசிக் கொள்கிறார்கள். இன்னமும் சாதி, மத மரபுகளைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டிருக்கும் குடும்பங்களில் தன் சிறிய மகனும் மகளும் எந்த மாதிரியான அறிவு பெற்றிருக்கிறார்கள் என்று கண்டு கொள்வதில்லை. அதுவும் வேலைக்குச் ச்ெல்லும் தாய், பொறுப்பில்லாத தந்தை, ஒரே மகள் என்ற குடும்பத்தில் மகள் பதினொன்றாகுமுன் பூப்பெய்தி விடுகிறாள் என்றால், தாய், இதை எதிர்பார்த்திராததால் 'சனியன், இதுக்கு இப்ப என்ன அவசரம்? என்று சிடுசிடுப்பைக் காட்டுவது நிகழ்கிறது. உடலுழைப்பிலும், அறியாமையிலும், உழலும் குடும்பங் களில் பெண் புதிய தலைமுறைப் பெண்ணாகக் கல்வி பயிலப் போனாலும், வேறு மாதிரியான சிக்கல்கள் நேரும். இந்த நிகழ்ச்சி யை தம்பட்டம் கொட்டுவது போல் விளம்பரப்படுத்தி, மஞ்சள் நீர், துணிமணி, விருந்து, மொய்ப்பணம் என்றெல்லாம் அந்தப் பெண் உடலுறவுக்கு, திருமணத்துக்குத் தகுதியாகிவிட்டதை அறிவிக்கிறார்கள். படிப்பின் மீதிருந்த கவனம் திசைதிருப்பப் படுகிறது. அவளை அப்போதே கடன் வாங்கியேனும் ஒரு மாப்பிள்ளைக்குக் கட்டி வைத்தாலே ‘குடும்ப மானம் காக்கப் படும் என்ற நெருக்குதலில் பெற்றோர் செயல்படுகிறார்கள். அலுவலகப் பதவியில் மேலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற உந்துதலில் வீட்டுப் பொறுப்பைச் சுமப்பது வேலை செய்யும் பெண்ணுக்கு இன்றியமையாத கடமையாகத் தோன்றுவதில்லை. கருத்தடை என்ற நோக்கில் அவன் ஒத்துழைக்க மறுக்கிறான். ஒவ்வொரு மாதமும் விலக்கு நாட்கள் தள்ளிப்போகும்போது, இவள் அதிகமான மன அழுத்தத்துக்கு உள்ளாகிறாள். மாத விலக்கை ஒழுங்குபடுத்தும் சிகிச்சை பெற மருத்துவ இல்லம் போய்வருகிறாள். மாதவிலக்கை ஒழுங்கு செய்யும் சிகிச்சை, ஒரு வகையில் கருக்கலைப்பு போன்றதுதான் என்று மருத்துவர் ஒருவர் கருத்துரைத்தார். பெண்களின் இத்தகைய சிக்கல்களைப் பற்றிய புரிந்துணர்வுகள் பெண் மருத்துவர்களிடையே ஒத்தவையாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய வாழ்க்கைச் சிக்கலில் புகுந்து புறப்படும் தாய், பதினோரு வயது நிரம்புமுன் பூப்பெய்திய பெண் படிப்பில் கெட்டிக்காரியாகத் திகழ்வதை மட்டும் கண்டு மனநிறைவு