பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../ காபி. . . 80 மகளிரின் உரிமைகளைப் பறிக்க முதல் படியாக அவள் உடலை அவளுக்கே அந்நியமாக்கித் தீர்த்த ஆணாதிக்கம், இருபதாம் நூற்றாண்டு தொடங்குவதற்கு முன்பே, அவளை அடிமையாக்கி, அறிவுசார் ஆற்றலையும் ஒடுக்கி, அவளை, மிதித்துக்கொண்டு அறிவியல் வளர்ச்சி என்று மார் தட்ட முனைந்துவிட்டது. மால்தஸ், அடித்தள மக்கள் சோற்றுக்கில்லாமல் பெருகுவதால், உணவுப்பற்றாக்குறை சமுதாயத்தை அழிக்கும் என்று கட்டுப் பாட்டை வலியுறுத்தினார். ஆனால், அவர் பெண்ணை மட்டும் பலிகடாவாக்கவில்லை. தாமதமான திருமணம்; புலனடக்கம். இவை அகிம்சை நெறியின் கூறுகள். தேவைகளும் சுகபோக வசதிகளும் மட்டுமே அறிவியல் வளர்ச்சியின் அறிகுறிகளாக ஓங்கிய வேகத்தில் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்பது, பலமுள்ளவளை அபலையாக்கி அவளை வெறும் போகப் பொருளாக்கித் தீர்க்க முற்பட்டது. அந்த இலக்கு இந்நாள் இயற்கையையே அழித்து மீட்சியில்லா நெருக்கடிக்குச்சமுதாயத்தை உட்படுத்தி இருக்கிறது. -- லூப் என்ற பெயரில் பல்வேறு தேவைக்கேற்ற மாறுதல் களுடன் பொருத்தும் இந்தக் கருத்தடைச் சாதனத்தை உலகில் இந்நாள் பல கோடிப் பெண்கள் கருப்பைகளில் ஏற்றிருக்கின்றனர். விழுந்துவிட்ட பல்லுக்குச் செயற்கைப் பல் வைத்துக் கொள்வது முதல் ஒவ்வாமையைத் தோற்றுவிக்கும். கண்பார்வைக் குறைபாட்டுக்கு 'கான்டாக்ட் லென்ஸ்’ என்ற சிறு தகடை விழிகளில் பொருத்திக் கொள்கின்றனர். மூக்குக் கண்ணாடி வேண்டாம். எல்லாமே முதலில் வெளித்தள்ள இயற்கை முயலும். பின்னர் அதுவே பழக்கமாகிவிடும். அதுபோல் திருத்தங்கள் பல செய்யப்பட்டு எளிமையாகக் கையாளும் வகையில், கருப்பைக்குள் செலுத்தப்படும் சாதனங்கள் வந்திருக்கின்றன. இந்தச் சாதனங்கள், உதாரணமாக "லிப்பேலூப்’ என்று அறியப்பட்ட சாதனம் 1960களின் பிற்பகுதிகளில் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்பது அரசின் வளர்ச்சித் திட்டங்களில் முதலிடம் பெற்றபோது, இந்திய மகளிருக்கு இது செலுத்தப் பட்டது. கிராமங்களில் ஒரு கடுகளவும் விழிப்புணர்வு இல்லாத மக்களிடையே மகளிரை அரசு மருத்துவமனைக்கு வரச் செய்து