பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்.../மரபுகளில்... 86 'பத்தாது தா, இன்னா செய்ய? எம் பொஞ்சாதி, எங்கனாலும் கயனி வேலய்க்குப் போவும். மொலியார்வூட்ட பெரி பொண்ணு வேல செய்யிது. மூத்தபய துடிப்பாகிறா. அவனதா இஸ்கோல்ல போடணும்.' மருத்துவர் அடுத்த அம்பை விடுகிறார். 'ஏம்பா, வருமானமே நிச்சயமில்ல. மூன்று புள்ளங்களுக்கு மேல வேணாம்னு அரசு சொல்லுது... இத்தோட நிறுத்திக்கிலாம் இல்ல?” அவன் வேலி கட்டலில் இருந்து நிமிர்ந்து பார்க்கிறான். "ஏம்மா? சருக்காரு ஆயிரம் சொல்லுது; புள்ள வேணான்னு சொல்ல அவங்க ஆரு? ஆண்டவங் கொடுக்கிறாரு. பெத்துக்கறம்.' அவன் முகம் கோபத்தால் சிவந்ததை நோக்கிவிட்டு, இவர் அவனை அமைதிப்படுத்தி கவுன்சிலிங் 'கைத் துவக்குகிறார். 'அது சரிதா, நீ சொல்றது சரி. ஒத்துக்கிற. புள்ளங்களோ பொண்சாதியோ பட்டினி கிடந்தா நல்லாருக்குமா? விலைவாசி எப்படி உசந்து போச்சு பாரு! குடும்பம் அளவோடு இருந்தா, நல்லா சாப்பாடு போட, துணிமணி எடுக்க, நல்லா படிக்க வைக்க.. வசதி பாரு?’’ 'வசதி என்னாங்க, பொல்லாத வசதி? ஆண்டவனுக்குத் தெரியாதா? ஆம்புளப்புள்ள எத்தினி இருந்தாலும் நெல்லதா. வயிசு காலத்துல கஞ்சு ஊத்தும்.' 'ஐயோ, அதச் சொல்லலப்பா.. ஆனா பாரு, நம்ம நாட்டுல, ஏற்கெனவே அறுபது எழுபது கோடின்னு போயிட்டிருக்கு. குழந்தைங்க ஆண்டவன் கொடுக்கிறான்னாலும் தேவைக்கு மேல இருந்தா, சிரமம் இல்லியா? ஆமா, நீங்க ஒட்டுப் போடுறீங்களா?” 'இட்டுகினு போறாங்க. ராத்திரி வந்து சாமி படத்துல சத்தியம் வாங்கிட்டு இன்ன கட்சி - சின்னம்னு போடச் சொன்னாங்க. முழுசா பத்து பத்தா அஞ்சு கொடுத்தங்க. சரின்னு சத்தியம் பண்ணினம். எம்பொஞ்சாதிக்கும் எனக்கும் இன்னொரு கச்சி ஆளு வந்தானுவ. பாஞ்சும், பாஞ்சும் முப்பது குடுத்தாங்க. வாங்கிக்கிட்டம். ஆனா, சத்தியம் பண்ண ஆளுக்குத்தாம் போட் டோம். பிரியாணி சோறு போடுறன்னாங்க. அதெல்லாம்