பக்கம்:உரிமைக் குரல்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 . காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் அவர்களும், கம்யூனி கட்சித் தலைவர்களுள் ஒருவரான நம்முடைய கே.டி.கே. தங்க மணி அவர்களும் இந்த விவாதத்திலே கலந்துகொண்டு பேசுகின்ற நேரத்தில் அண்ணா அவர்களுடைய -எதிர்த் தரப்பிலிருந்தபோது வாதாடுவதற்காக எடுத்துக்கொண்ட ஒரு அழகான வாக்கியத்தை இருவருமே பயன்படுத்தினார்கள். எதிர்க் கட்சியாக இருப்பது. ஆளுங்கட்சிக்கு லாலி பாடுவதற்காக அல்ல. எதிர்ப்பான கருத்துக் களைத் தெரிவிப்பதற்காகத்தான் இருக்கிறோம் என்று சொன்னார் கள். ஆனால் அண்ணா அவர்கள் ஆளுங்கட்சி செய்கின்ற நல்ல காரியங்களை எல்லாம் பாராட்டுகின்ற அதே உணர்வோடு, தீய காரியங்களை எதிர்த்திட வேண்டும் என்கின்ற கருத்தினையும் கொண்டிருந்தார்கள் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. எதிர்க் கட்சித் தரப்பிலே காங்கிரஸ் கட்சியானாலும் அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமானாலும், கம்யூனிஸ்ட் கட்சி யானாலும் அல்லது வேறு எந்தக் கட்சியானாலும் இங்கே பேசிய நேரத்தில் நாங்கள் லாலி பாடுவதற்காக இங்கே வரவில்லை என்று சொன்னபோது, நான் எண்ணிக்கொண்டேன், இந்த அரசை எதிர்த்து அல்லது இழித்து அல்லது புழித்துப் பேசிய நேரத்தி லெல்லாம் நான் அதை லாலியாகக் கருதிக் கொள்ளாவிட்டாலும் நம்முடைய பழைய காலத்துக் கல்யாண வீடுகளிலே நடைபெறு கின்ற தலுங்குப் பாட்டாக அவைகளையெல்லாம் கருதிக்கொண் டேன். கல்யாண வீடுகளில் - மாப்பிள்ளை அழகாக இருப்பார். மணமகளும் அழகாக இருப்பாள் ஆனால் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரைப் பழித்துப் பாடுகின்ற நேரத்தில் எ - ாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைக்_குரல்.pdf/8&oldid=1701892" இலிருந்து மீள்விக்கப்பட்டது