பக்கம்:உரிமைப் பெண்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தூரப் பிரயாணம்

95

 நான் அழைத்தபோது கூட அவன் எழுந்திருக்கவில்லை. சாப்பிடவும் மறுத்துவிட்டான்.

மறுநாள் என் மனைவி சாமர்த்தியமாக ஒரு காரியம் செய்தாள். சடையனை யாரிடமோ பிடித்துக் கொடுத் தனுப்பிவிட்டாள். அது வீட்டிலிருப்பதால்தான் ராஜாமணி கெட்டுப் போகிறான் என்று அவள் எண்ணிக் கொண்டிருந்தாள்.

சடையனும் இல்லாமற்போகவே ராஜாமணியின் உள்ளம் நொறுங்கிவிட்டது. அவனுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியளித்து வந்த ஓருயிரும் இப்பொழுது அவனுடன் இல்லை. சிற்றன்னை அடித்ததை மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேனென்றோ என்னவோ, அவனுக்கு என்னிடமும் பிரியம் விட்டுவிட்டது. அவன் உள்ளத்திலே ஏற்பட்ட குமுறலாலோ அல்லது என் மனைவி கூறியபடி கண்டபடி சுற்றியதாலோ கிடீரென்று ராஜாமணிக்குச் சளிக் காய்ச்சல் கண்டது, மூன்று நாட்கள் அவன் வாயில் ஜலங்கூட ஊற்றவில்லை. நல்ல நினைவை உண்டாகாமல் பிதற்றிக்கொண்டே படுத்திருந்தான். அடிக்கடி “சடையா, எங்கே போய்விட்டாய்? வா, தூரப் பிரயாணம் போகலாம்” என்று கூவினான்.

அவன் கூப்பிடுவது சடையனுக்கு எப்படிக் கேட்டதோ தெரியவில்லை. மூன்றாம் நாளன்று மாலையில் எங்கிருந்தோ சடையன் வந்துவிட்டது. வந்ததும் அது ராஜாமணி படுத்திருந்த கட்டிலில் தனது முன்னங் கால்களை வைத்து அவனை ஆவலோடு பார்த்தது. வாலைக் குழைத்தும் பல விதமான சப்தங்கள் செய்தும் தனது உள்ள உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது. ராஜாமணி அதை அன்போடு தடவிக் கொடுத்தான். பிறகு கண்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/100&oldid=1138254" இலிருந்து மீள்விக்கப்பட்டது