பக்கம்:உரிமைப் பெண்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தந்தை சொல்

107

 மாதங்களில் தீர்ந்து போகுமென்று நான் உறுதி கூறுகிறேன்.

எனது கல்யாண விஷயமாக நான் ஒர் எண்ணம் வைத்திருக்கிறேன். அதைக் கோடை விடுமுறையின் போது தங்களுக்கு நேரில் தெரிவிக்கிறேன். இப்பொழுது அதைப்பற்றிய ஞாபகமே எனக்கில்லை. பி. ஏ. படிப்பைச் சிறந்த வெற்றியுடன் முடிக்க வேண்டுமென்பதே எனது சிந்தனையெல்லாம்.

தங்கள் அன்புள்ள மைந்தன்,
ரங்கசாமி.

“அவனுடைய கடிதத்தைப் படித்த பிறகும் எனது ஆசை மாறவில்லை. எப்படியும் நான் நினைத்தபடியே கல்யாணத்தை முடித்து விடவேண்டுமென்று தீர்மானித்தேன்.

“இந்தச் சமயத்திலே பெண்ணின் தகப்பனார் ஏதோ காரியமாகச் சென்னைக்குப் புறப்பட்டார். என்னையும் கூட வரும்படி அழைத்தார். நேரிலேயே மகனிடம் பேசி எல்லாம் முடிவு செய்யலாம் என்று அவர் எனக்கு யோசனை சொன்னார். கல்யாணப் பேச்சுத் தொடங்கியதிலிருந்து அவருடன் நான் அதிகம் பழகிக் கொண்டிருந்தேன். அதனால் அவர் சொல்லிய யோசனையை ஏற்றுக் கொண்டு சென்னைக்கு அவருடன் சென்றேன். ரங்கசாமிக்கு எனது விருப்பத்தைப் பல வகைகளில் எடுத்துக் கூறினேன். அவன் எனது பேச்சைத் தட்டுதற்கு வருங்தினானாயினும் எனது கருத்துக்கு இசையவே இல்லை.

“ஒரே சமயத்தில் விடாப் பிடியாக வற்புறுத்தக் கூடாது என்று நான் திரும்பி வந்துவிட்டேன். வந்த சில நாட்களுக்குப் பிறகு நான் அவனுக்கு ஒரு கடிதம் எழுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/112&oldid=1138376" இலிருந்து மீள்விக்கப்பட்டது