பக்கம்:உரிமைப் பெண்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

உரிமைப் பெண்

 வந்தது. ஆனால் அப்ப யாரும் பெண் கொடுக்க மாட்டேனென்று சொல்லிவிட்டார்கள்.”

மாராயி மறுபடியும் சிரித்தாள்.

“மாரு, இப்போ எனக்கு நீ தான் உயிர் உன்னிடத்திலே எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்லப்போகிறேன்?”

“சரி தாத்தா, அப்புறம் சொல்லுங்க”

உனக்கு ரெண்டு வயசா இருக்கும்போது நான் ஒரு கல்ல கடாரி வாங்கி வந்தேன். அதையாவது வேலாத்தாள் மேய்த்து வளர்க்கட்டுமென்று நான் நினைத்தேன். அவளுக்கும் அதன்மேலே ரொம்ப ஆசைதான். ஆனால் தினமும் ராக்திரியிலே வீட்டுக்கு ஓட்டி வருவதில்லை. ஒரு நாளைக்குப் போய் ஒட்டிக்கொண்டு வருவாள். நாலு நாளைக்குப் போகமாட்டாள். காட்டிலே விட்டுவிடுவாள். நான் அதைப்பற்றி ராமசாமியிடம் சொன்னாலும் அவனும் காதில் போட்டுக்கொள்வதில்லை. பல தடவை இப்படி நடக்கவே எனக்குக் கோபம் அதிகமாய்க்கொண்டே வந்தது. காட்டிலேயே மாடு இருப்பதால் ஒன்றும் முழுகிப்போய்விடாது. இருந்தாலும் என் பேச்சை சட்டை செய்யாமல் வீட்டிலேயே இருந்துகொண்டிருக்கிறாளே என்று கோபம் அதிகமாய்விட்டது. ஒரு நாள் ராத்திரி கடாரி விட்டுக்கு வாராததைப் பார்த்து நான் அவர்கள் ரெண்டு பேரையும் வாய்க்கு வந்தபடி யெல்லாம் பேசிவிட்டேன்.

“மழை வருவது போல இருக்கிறது; ஒரே இருட்டாயும் இருக்கிறது. எப்படிப் போகிறது?” என்று ராமசாமி மெதுவாகச் சொன்னான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/71&oldid=1138005" இலிருந்து மீள்விக்கப்பட்டது