பக்கம்:உரிமைப் பெண்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

உரிமைப் பெண்

 கிறது; பட்டணத்திலே இடம் தெரியாது அலைகிறான்’ என்று நினைத்து இரக்கப்பட்டுக்கொண்டேன். நாட்டுப் புறங்களிலுள்ள மக்களில் எத்தனையோ பேர் தமக்குள்ளே விணாகச் சச்சரவு செய்துகொண்டு பட்டணத்து வீதிகளிலே வக்கீலையும் கோர்ட்டையும் தேடித் திரிந்து கையிலுள்ள பொருளையும் தொலைத்துக் கஷ்டப்படுகிறார்கள் என்கிற வருத்தமான விஷயம் என் மனத்திலே, எழுந்தது. ஆனால் அதைப் பற்றி நெடு நேரம் சிந்தனை செய்துகொண்டிருக்க நேரமில்லை.

அன்று ஒரு நல்ல இசையரங்கு நடக்க இருந்தது. அதற்குப் புறப்படவேண்டிய யத்தனத்தில் கவனம் செலுத்தலானேன்.

ஐந்து நிமிஷங்கூட ஆகவில்லை; அவன் மறுபடியும் வந்தான். ஆனால் நான் அவனைப் பார்க்கவில்லை; என் மனைவி பார்த்தாள். அவளிடம் என்ன எங்கே என்று விசாரித்தானாம். “இதோ உள்ளே குளிக்கும் அறைக்குப் போயிருக்கிறார்; வந்து விடுவார்” என்று என் மனைவி பதில் சொன்னாள். “அதிக நேரம் ஆகுமா? அவரிடம் அவசர மாக ஒன்று கேட்க வேணும்” என்றான் அவன். அவள் யதார்த்தமாக உட் பக்கம் வந்து என்னிடம் விஷயத்தைக் கூறிவிட்டு மறுபடியும் அவனுக்குப் பதில் கூற முன் அறைக்குச் சென்றாள்.

இதற்குள்ளே பட்டணம் கை வேலை செய்துவிட்டது. மேஜை மேல் நான் சற்று முன்புதான் கழற்றி வைத்து விட்டுப்போன கைக்கடிகாரத்தை அவன் எடுத்து மறைத்துக்கொண்டான். சற்று நேரத்தில் நான் வந்துவிடுவே னென்கிற செய்தியை அவனுக்கு என் மனைவி சொல்லவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/77&oldid=1138078" இலிருந்து மீள்விக்கப்பட்டது