பக்கம்:உரிமைப் பெண்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துாரப் பிரயாணம்

98

 என்னவோ. நான் இரண்டாவது கல்யாணம் செய்து கொள்கிறபோது ராஜாமணிக்கு எட்டு வயது. கல்யாணமாகியும் இாண்டு வருஷங்களாய்விட்டன. இன்னும் அவன் ஏக்கங்கொண்டே இருக்கிறான். தாயின் உடலை மயானத்திற்கு எடுத்துக்கொண்டு போனபோது வாடிய அவன் முகம் அடிக்கடி அதே வாட்டத்தோடு காணப்படுகிறது. சடையனோடு விளையாடும்போதும், அதைக் கூட்டிக்கொண்டு வெளியே புறப்படும்போது தான் அவன் முகத்தில் உண்மையான மகிழ்ச்சி பிரகாசிக்கின்றது. என்னுடன் கொஞ்சும்போதும் சிரித்துக்கொண்டுதானிருக்கிறான். ஆனால் அவன் தன் சிற்றன்னையின் முன்னிலையில் இருக்கும்போது எதையோ இழந்துவிட்டவன் போலக் காணப்படுகிறான்; முகத்தில் புன்னகையே தோன்றுவதில்லை.

மத்தியானம் ஒரு மணியாகிவிட்டது; இன்னும் ராஜாமணி திரும்பி வரவில்லை. உங்கள் பையனுக்கு நீங்கள் கொடுக்கிற செல்லம் பார்த்தீர்களா? நாயைக் கூட்டிக் கொண்டு போனவன் இன்னும் வரவில்லை. இனிமேல் வந்து சாப்பிட்டால் உடம்பு இளைத்துப்போகாமல் என்ன செய்யும்? நேரத்திற்கு நேரம் சாப்பிடாமல் இப்படியே சுற்றுகிறான்; பிறகு நான் கவனிக்கவில்லையென்றால் என்ன செய்வது? பையனைக் கொஞ்சம் மிரட்டி வைத்திருந்தால், இப்படியெல்லாம் இருப்பானா? நான் சொன்னால் மட்டும், உனக்கென்ன தெரியும் பிள்ளை அருமை?” என்பீர்கள் என்று என் மனைவி நீட்டினாள்.

ராஜாமணியின் மேல் எனக்குக்கூடச் சிறிது கோபந்தான். அதனால் அவன் திரும்பி வந்ததும் அவன் மேல் அவள் சீறிவிழுந்ததை நான் மெளனமாக விட்டுவிட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/98&oldid=1138240" இலிருந்து மீள்விக்கப்பட்டது