பக்கம்:உருவும் திருவும்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 உருவும் திருவும்

வதனைக் கண்டேன்’ என்கிருன், சொல்லின் செல்வனம் அனுமன்.

விற்பெருந் தடந்தோள் வீர வீங்குநீர் இலங்கை வெற்பில் நற்பெருந் தவத்தளாய கங்கையைக் கண்டேன் அல்லேன் இற்பிறப்பு என்பதொன்றும் இரும்பொறை என்ப தொன்றும் கற்பெனும் பெயர தொன்றும் களிநடம் புரியக் கண்டேன்.

-கம்ப. சுந்தர. திருவடிதொழுத படலம்: 29.

தெய்வப் புவவர் சேக்கிழார் பெருமானும் இவ்வாறே திருஞான சம்பந்தர் புராணத்தில் ஞானசம்பந்தரைக் குணியாக உருவகிக்காமல் குணமாக உருவகித்துக் கூறி யுள்ளார். மதுரை வந்து மடத்தில் தங்கியிருந்த ஆளுடைய பிள்ளையைப் பாண்டி மாதேவி மங்கையர்க் கரசியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் வந்து கண்ட பொழுது அவர்கள் ஞானசம்பந்தப் பெருமானைக் காணவில்லை என்றும், ஞானத்தின் திருவுருவை, நான்மறையின் தனித்துணையை, மண்ணில்வளர் மதிக்கொழுந்தை, கானத்தின் எழு பிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள் என்றும் கூறியுள்ளமை ஈண்டு ஒப்புநோக்கி உணரத்தக்கது.

ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணையை வானத்தின் மிசையன்றி மண்ணில்வளர் மதிக்கொழுந்தைத் தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும் கானத்தின் எழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள்.

-பெரிய. திருஞானசம்பந்தர் புராணம்: 728.

ஒலிநயம். கேட்போர்தம் செவி வாயிலாக உள் நுழைந்து அவர்தம் உடல் நரம்புகளே இயக்கும் பேராற்றல் வாய்ந்ததாகும். உணர்ச்சிகளை வண்ணமுற வடித்துத் தரும் ஒலிநயம் பாட்டின் உயிர் போன்றது. பல்வேறு சந்தவின் பங்களைப் பாட்டில் புலப்படுத்தும் அரிய திறம் படைத்தவன் கவிச்சக்கரவர்த்தி கம்பன். மேலும் ஒலி நயத்திற்கு விரிந்து