பக்கம்:உருவும் திருவும்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கட்டிய கலக்கோயில் 99

இடங்கொடுப்பது விருத்தப் பாவாகும்; எனவே விருத்த மென்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்’ என்றும், வரமிகு கம்பன் சொன்ன வண்ணமும் தொண்ணுாற்றாறே” என்றும் கம்பநாடன் கற்றாேரால் கவினுறப் போற்றப்படுகின்றான். சான்றாக ஒரிடத்தினைக் காண்போம். இராமன்மேல் கட்டுக் கடங்காத காதல்கொண்ட சூர்ப்பணகை இராமனை வசீகரிக்க எண்ணித் தன்னை வண்ணமுறப் புனைந்து அன்ன மென வருகின்ற அவள் நடையழகிற்கு ஏற்பவே பாட்டின் நடையும் செல்கின்றது.

பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச் செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும் வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்.

-கம்ப. ஆரணிய. சூர்ப்பணகைப் படலம்: 31.

இப் பாட்டில் வல்லோசை குறைந்து மெல்லோசை மிகுந்த சொற்கள் பொருந்தி வருவதனைக் காணலாம். இது போன்றே பரதனுடைய சேனையினைத் துாரத்தே கண்ட குகன் கூற்றமெனச் சீற்றத்தால் கொதித்தெழுகிருன். அது பொழுது கம்பன் அவன் உணர்ச்சியினை வடிக்கும் பாட்டு உணர்ச்சிக்கேற்ற யாப்பமைந்து துலங்குகின்றது:

ஆழ நெடுந்திரை யாறு கடந்திவர் போவாரோ வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ தோழமை என்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றாே ஏழமை வேடன் இறந்திலன் என்றென ஏசாரோ.

-கம்ப. அயோத்தியா. குகப்படலம்: 15.

ஓரிடத்தில் சொன்ன கருத்தினை நினைவுகூர்ந்து அதற் கேற்பப் பின்வரும் கவிதைகளைப் படைத்தல் கம்பனின் காவியப் புலமைக்கு மெருகேற்றுகின்றது. சீதையைத்