பக்கம்:உருவும் திருவும்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. தமிழ் இலக்கியத்தில் பெளத்த

சமயக் கருத்துக்கள்

பூரண ஞானம் பொலிந்த கன்னடு புத்தர் பிரானருள் பொங்கிய நாடு

என்று பாடினர் பாரதியார். உலகில் அறம் குன்றி, மறம் தலைதுாக்கும் பொழுதெல்லாம் நம் பாரத புண்ணிய பூமி யிலே மகான்கள் பலர் அவதரித்துள்ளனர். அவர்கள் மக்களுக்கு அன்பு வழியினைக் காட்டி, அறநெறியினைப் புகட்டி, உலகு உய்யத் தாங்கள் வாழ்ந்து காட்டி யுள்ளனர்.

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னல் இமயமலை அடிச்சாரலிலே இப்போதைய நேபாள நாட்டிலே கபிலவத்து என்னும் ஊர் இருந்தது. அவ்வூரினைத் தலை நகராகக் கொண்டு சுத்தோதனர் என்னும் மன்னர் ஆண்டு வந்தார். அவர்க்கும் அவர்தம் அன்பு மனைவியார் மாயா தேவிக்கும் கி. மு. 563-ல் ஒர் ஆண் மகவு பிறந்தது. அக் குழவி பிறந்த நாளில் நாட்டில் பல நன்னிமித்தங்கள் தோன்றின. அசிதன் என்ற முனிவர், ‘மானிடராகிய மரத்தில் பல நூற்றாண்டுகட்கு ஒரு முறை மலரும் மலர் இக் குழந்தை; உமது குலப்பெருமையை என்னென்றுரைப்பேன்! இவன் துறவு பூண்டு, உலக ரட்சகனக இருப்பான்’ என்று மன்னர் சுத்தோதனரிடம் கூறினர். பிறந்த ஏழாம் நாளில் தாயார் மாயாதேவி மறைந்தாள். இச் செய்தியினை,

உலும்பினி வனத்துள் ஒண்குழைத் தேவி வலம்படு மருங்குல் வடுகோ யுருமல்