பக்கம்:உருவும் திருவும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெளத்த சமயக் கருத்துக்கள் 105

முதலிய தூர தேசங்களிலும் புத்தமதம் பரவி நிலைத்தது. கி. பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டிற்கு வந்த யுவான் சுவாங் என்னும் சீன யாத்திரிகர் தமிழ் நாட்டில் புத்தமதம் பரவி யிருந்த செய்தியினைக் குறிப்பிடுள்ளார்.

இனி, தமிழ் இலக்கியத்தில் புத்த சமயக் கொள்கைகள் எந்த அளவிற்கு இடம் பெற்றுள்ளன எனக் காண்போம்: தமிழ் நூல்களில் மணிமேகலை, குண்டலகேசி, வீரசோழியம், சித்தாந்தத் தொகை, திருப்பதிகம், விம்பசார கதை முதலிய நூல்கள் பெளத்தர்களால் இயற்றப்பெற்ற நூல்களாகும். ஆனல், மணிமேகலை என்னும் காப்பியமும், வீரசோழியம் என்னும் இலக்கண நூலும் மட்டுமே இன்று இறந்துபடாமல் வாழ்கின்றன. எனவே, நாம் இவற்றையே புத்த சமயக் கொள்கைகளை அறிவதற்கு ஊடுருவிக் காண வேண்டியுளது. இளம்போதியார் என்ற சங்ககாலப் புலவர், பெயரால் பெளத்தராகக் காணப்படினும், அவர் எழுதியுள்ள பாடல் களில் பெளத்தசமயக் கருத்துக்கள் ஒன்றையும் காணமுடிய வில்லை.

புத்தர் கூறியதாவது : “நான் விதைப்பது அன்பு: தூய பணிகளே அதனை வளப்படுத்தும் மழை; ஞானமும் அடக்க முமே உழுபடைகள். புத்தரிடம் காணப்படும் பெருஞ் சிறப்பு அவர், தாம் சொல்லிய வண்ணமே வாழ்ந்து காட்டிய தாகும். கோமுகிப் பொய்கையிலிருந்து அமுதசுரபி என்னும் அட்சய பாத்திரத்தைப் பெற்ற மணிமேகலை அளவுகடந்த மகிழ்ச்சியுற்று,

மாரனை வெல்லும் வீர நின்னடி தீநெறிக் கடும்பகை கடிந்தோய் கின்னடி பிறர்க்கற முயலும் பெரியோய் கின்னடி துறக்கம் வேண்டாத் தொல்லோய் கின்னடி

என்று பலவாறு கூறிப் புத்த தேவரைத் தொழுதாள்,