பக்கம்:உருவும் திருவும்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருவும் திருவும் 9

பின்னர், சுந்தரகாண்டத்தில், அனுமன் அசோகவனத்தில் சிறையிருந்த செல்வியாம் சீதையிடம் தன் வருகையினை உணர்த்தும் படலத்தை உருக்காட்டுப் படலம் என்று அழைத் திருக்கின்றார்.

பெருஞ்சித்திரளுர் என்னும் புலவர் வெளிமான் என்னும் மன்னனிடம் பரிசில் பெறச் சென்றார். நோயுற்ற நிலையில் இருந்த வெளிமான் தன் தம்பியைப் பரிசில் கொடு என, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது போய், குமணனைப் பாடி, குமணன் பகடு கொடுப்பக் கொணர்ந்து நின்று, வெளி மான் ஊர்க் காவல்மரத்தில் கட்டிச் சென்று சொல்லிய புறப் பாடல் வருமாறு:

இரவலர் புரவலை நீயும் அல்லை; புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்: இரவலர் உண்மையும் காண் இனி; இரவலர்க்கு ஈவோர் உண்மையும் காண் இனி, கின் ஊர்க் கடிமரம் வருந்தத் தந்துயாம் பிணித்த நெடுநல் யானை எம்பரிசில், கடுமான் தோன்றல்! செல்வல் யானே.

-புறம் : 162

இப் பாடலால், காணுது தந்த பரிசிலை-வள்ளல் நேராகவே வந்து தராத பரிசிலைக் கொள்ளாது-உருவில்லாததால் திருவை வேண்டா என்று உதறிய புலவர் பெருஞ்சித்திர னரின் பெருமித நெஞ்சத்தினை நாம் காண்கின்றாேம்.

இப்பொழுது அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் கள், அரசாங்க அலுவல்களில் அமர்த்தப்பெறும் மாணவர்கள் எக்கருத்துக்கொண்டு, எந்த மதிப்பீடு கொண்டு உருத்தேர்வு” (Personality Test) வெற்றி பெற்றவர்களாகக் கருதப் பெறுகின்றனர் என்று கேட்டார்கள். அந்த அளவிற்கு உருத்