பக்கம்:உருவும் திருவும்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெளத்த சமயக் கருத் துக்கள் 109

“மக்கள் யாக்கை ஊழ்வினை காரணமாகத் தோன்று கிறது; மேலும் வினைக்குக் காரணமாவது. மேலே அழகு செய்யும் பொருள்கள் நீங்கிடில் புலால் நாற்றம் வீசும் உடம்பு புறத்தே இடப்படுவது. முதிர்ந்து அழியும் தன் மைத்து. கொடிய நோய்கட்கு இருப்பிடமாவது. பற்றுகள் யாவும் பொருந்தும் இடம். குற்றங்கள் பொதிந்த ஒரு பாண்டம். கோபத்தின் உறைவிடம். கவலைகட்கு இருப் பிடம்’ என்ற உடம்பைப் பற்றிய பெளத்தர்களின் கொள்கையினை.

விளையின் வந்தது வினைக்குவிளை வாயது புனைவன நீங்கிற் புலால்புறத் திடுவது மூப்புவிளி வுடையது தீப்பிணி யிருக்கை பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம் புற்றடங் கரவிற் செற்றச் சேக்கை அவலக் கவலை கையா றழுங்கல் தவலா உள்ளம் தன்பா லுடையது மக்கள் யாக்கை யிது

-மணிமேகலை: 4: 118-120.

எனவரும் மணிமேகலை அடிகளால் அறியலாம்.

இதனையே குண்டலகேசி ஆசிரியர் நாதகுத்தனர்.

பாளையாம் தன்மை செத்தும்

பாலனம் தன்மை செத்தும் காளையாம் தன்மை செத்தும்

காமுறும் இளமை செத்தும் மீளும்இவ் வியல்பு மின்னே மேல்வரு முப்பு மாகி நாளுநாட் சாகின் ருேமால்

நமக்குங்ாம் அழாத தென்னே

என்று நயம்படக் குறிப்பிட்டுள்ளார்.