பக்கம்:உருவும் திருவும்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 உருவும் திருவும்

இளமையும் கில்லா யாக்கையும் கில்லா வளவிய வான்பெருஞ் செல்வமும் கில்லா புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே விழுத்துணை யாவது

என்று புத்த தர்மத்தை விசாகை வாயிலாக உணர்த்துகின்றா சாத்தனர்.

இவ்வண்ணமாகப் பெளத்த சமயக் கருத்துக்கள் பலவும் மணிமேகலையில் பொருத்தமுறப் பொருந்தி வந்துள்ளன. இக் கட்டுரையினை குண்டலகேசி எனும் அழிந்துபோன பெருங்காப்பிய நூலில் வந்துள்ள புத்ததேவ வணக்கச் செய்யுள்கொண்டு முடிப்பது பொருத்தமாகும்:

முன்றான் பெருமைக்கண்

நின்றன் முடிவெய்து காறும் நன்றே நினைந்தான் குணமே

மொழிந்தான் தனக்கென்று ஒன்றானும் உள்ளான் பிறர்க்கே உறுதிக் குழந்தான் அன்றே இறைவன் அவன்தாள் சரணங்கள் அன்றே.