பக்கம்:உருவும் திருவும்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. பாரதியின் பாப்பாப் பாட்டு

‘பாட்டுக்கொரு புலவன் பாரதி’ என்று நாட்டு மக்கள் நலமுடன் பாராட்டும் தேசியகவி பாரதியார், பாமரர் முதல் பாவலர் வரை, பாப்பா முதல் பெரியோர் வரை, தொண்டன் முதல் தலைவர் வரை, அடிமை முதல் ஆண்டான்வரை, காமுகன் முதல் காதலன் வரையுள்ள பலரைக் குறித்தும் பலபடப் பாடல்கள் புனைந்துள்ளார். “அவர் தொடாதது ஒன்றுமில்லை; தொட்டதை அழகு படுத்தாமல் விட்டதில்லே என்று டாக்டர் ஜான்சன், பேரெழுத்தாளராம் கோல்டுஸ் மித்தைப் பாராட்டியது போல நாமும் பாரதியாரைப் பாராட்டத் தகும். இது மிகைக் கூற்று ஆகாது. இது குறித்தே இக்காலத் தமிழ் அறிஞர் ஒருவர், இந்நூற்றாண் டினைப் பாரதியுகம் என்று பொருத்தமுறக் கூறிப் போந்தார் தமிழ் இலக்கிய வளர்ச்சியை-குறிப்பாகக் கவிதை வளர்ச்சி யைப் பொறுத்தவரையில், பாரதியார் இந்நூற்றாண்டில் தலைசிறந்த இடத்தினைப் பெறுகின்றார். பழைய மரபிலே வேரூன்றிப் புதியவழியிலே கிளைத்துப் படர்ந்த கற்பனையினைப் பாரதியார் பாடல்களில் நாம் காணலாம். பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய்ப் பாரதியின் பாடல் கள் துலங்குகின்றன. பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்தவர் பாரதியே யாவர்: “முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் அமைந்து, அழகுநலஞ் சொட்டும் கவினுறு கவிதைகள் பாரதியின் பாடல்களாகும். செஞ்சொற்கள் விரவி நின்று பொருள் நயம் கெழுமி நிற்பன அவர்தம் கவிதைகளே. பாரதியாரின் எழுதுகோல் சமுதாயம், சமயம், அரசியல், மொழி,

நாடு, உ. தி.-8