பக்கம்:உருவும் திருவும்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் பாப்பா பாட்டு 115

அண்டிப் பிழைக்கும் ஆட்டையும், ஆதரிக்க வேண்டும் என்று அடுத்து அறிவுறுத்துகின்றார்.

பாப்பா, ஒரு நாளில் என்னென்ன கடமைகளை ஆற்ற வேண்டும் என்பதை முறைப்படி வரிசைப்படுத்திச் சொல்லு கின்றார் பாரதியார்: -

காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு

கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

மாலை முழுவதும் விளையாட்டு-என்று

வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா!

காலையில் படிப்பும் பாட்டும், மாலையில் விளையாட்டும் உடலுக்கும் உயிருக்கும் வளம் சேர்ப்பன. பொய்யும் புறமும் சொல்லாத நற்பண்பு வாழ்விற்கு நலம் சேர்ப்பது; தெய்வ நம்பிக்கை எந்தத் தீங்கினையும் எற்றி எறியும் வன்மையை அளிக்கவல்லது. இதனையடுத்து வாழ்வில் நன்மையுற நடந்து கொள்ளவேண்டிய வழி முறைகளைக் கூறுகின்றார் பாரதியார். பாதகஞ் செய்பவரைக் கண்டு பயங்கொள்ளாமல், அவர்களை மோதி மிதித்துவிட்டு, துன்பம் நெருங்கி வந்தபோது சோர்ந்து விடாமல், அன்புமிகுந்த தெய்வம் துன்பம் அத்தனையும் போக்கிவிடும் என்ற நம்பிக்கை ஒளியோடு வாழ்வில் முன்னேற வேண்டும் என்கிரு.ர். “அலைகள் ஓயாமல் மோதும் கற்பாறை போன்று இரு. அது தன்னைச் சூழ்ந்துள்ள தண்ணிரின் வேகத்தை அடக்கிவிடுவதுபோல உன் மனமும் துன்பம் வந்தற்றபொழுது உறுதியுடன் இருக்குமாளுல் துன்பம் அனைத்தும் தன்னுவே மறைந்துவிடும்’ என்று கூறிஞர் பிறநாட்டு அறிஞர் மார்க் ஒளரேலியன். இதனயே பாரதியார் பிறிதோரிடத்தில்,

துன்பமே இயற்கையெனும் சொல்லை மறந்திடுவோம் இன்பமே வேண்டிகிற்போம் யாவும் அவள் தருவாள்

என்று கூறியுள்ளார். எனவே இன்பம் வந்துற்றபொமுது இறுமாத்து விடாமல், துன்பம் வந்துற்ற காலையில் சோர்ந்து