பக்கம்:உருவும் திருவும்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T20 உருவும் திருவும்

அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்

தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்; முன்னர் காடு திகழ்ந்த பெருமையும்

மூண்டி ருக்குமிங் நாளின் இகழ்ச்சியும் பின்னர் நாடுறு பெற்றியுங் தேர்கிலார்

பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்; என்ன கூறிமற்றெங்ஙன் உணர்த்துவேன் இங்கி வர்க்கென துள்ளம் எரிவதே?

-சுயசரிதை : 26

ஆயினும் அந்த அலங்கோலத்திற் கேற்பவே பாரதியாரின் தந்தையாரும் தம் மைந்தனை ஆங்கிலக் கல்வி கற்கவே அனுப்பினர். பாரதியின் பைந்தமிழ்ப் பாட்டிசைக்கும் பாநல உள்ளமோவெனில் நொய்ந்தது; அறிவோ வெனில் ‘வாரித் துரும்பென அலைந்து நைந்தது; இந்தப் போராட்டத் தினலே ஏற்பட்ட பலனைப் பாரதியாரே பின்வருமாறு கூறு கின்றார்.

செலவு தந்தைக்கோ ராயிரஞ் சென்றது. தீதெ னக்குப்பல் லாயிரஞ் சேர்ந்தன; நலமொ ரெட்டுனை யுங்கண்டி லேனிதை

நாற்ப தாயிரங் கோயிலிற் சொல்லுவேன்.

-சுயசரிதை: 29.

இவ்வாறு பொருளைப் பெருக்கவே உதவும் புன்மைக் கல்வியினைப் பாரதியார் வன்மையுறக் கண்டிக்கிரு.ர். இவையெல்லாம் அவர் “சுயசரிதைப் பகுதியிலே நாம் காணும் கருத்துக்களாகும். அக்காலக் கல்வியின் சீர்கேட் டினையும், நாட்டுப் பற்றும் மொழிப்பற்றும் இனப்பற்றும்